த.மு.ஆரியசங்காரன் நினைவேந்தல் - 15-Mar-2016 10:03:56 PM

மும்பை திமுகழகத்தின் மூத்த முன்னோடி, பெரியார் பெருந்தொண்டர் த.மு.ஆரியசங்காரன் நினைவேந்தல் விழா சயான், எம்.எசு.சுப்புலட்சுமி அரங்கில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி என்.சிவா தலைமையில் நடைபெற்றது. த.மு. ஆரியசங்காரன் படத்தை திருச்சி என்.சிவா, பேரா.சுப.வீரபாண்டியன் இருவரும் திறந்து வைத்தனர். மும்பை திமுகழக முன்னாள்  செயலாளர்கள் எஸ்.தியாகராசன், த.மு.பொற்கோ, த.மு.ஆரியசங்காரன் ஆகியோரின் படத்தை திமுகழத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா திறந்து வைத்தார்.

மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி என்.சிவா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகிய இருவரும் சிறப்பு நினைவேந்தலுரை நிகழ்த்தினர்

நாடாளுமன்ற சிவசேனா உறுப்பினர் இராகுல் ஷேவாலே, செ.செல்லப்பன் ஐ.ஏ.எசு., சட்டமன்ற பாஜபா உறுப்பினர் தமிழ்ச்செல்வன், இதழியலாளர் சு.குமணராசன், பொ.அப்பாதுரை, அலிசேக் மீரான், பெ.கணேசன், அ.இரவிச்சந்திரன், புதிய மாதவி, மு.தருமராசன், சமீரா மீரான், முகமதலி ஜின்னா, சாலமன், ம.சேசுராசு, பொறியியலாளர் செல்வின், மாணிக்கராசா, அன்பழகன் பொற்கோ, இர.இராசாமணி முதலியோர் இரங்கலுரை ஆற்றினர்.


Go Back