கொதிக்கும் பூமி -
கொதிக்கும் பூமி
மு. பாலசுப்பிரமணியன்.
கிழக்கே உதிக்கும் சூரியனால் பூமி கொதிப்பதில்லை; இயற்கை வளங்களை அழித்திடும் வேதியப் பொருட்களின் கழிவுகளை வீசி எறிவதுடன் இயற்கையான பசுங் காடுகளை அழித்து அடுக்கு மாடிகளைக் கட்டிக் கொண்டிருக்கும் மனிதனால்தான் பூமி கொதிக்கிறது. தலைவர்கள் பெயர் சொல்லிப் புகழாரம் சூட்டுகிறார்கள் சாதியை அறிந்துகொள்வதே பிறவிப்பயன் என பித்துபிடித்து அலைகிறார்கள். தெரிந்து கொண்டதும் இனத்தோடு சேர்ந்தும் சேர்த்தும் இயங்குகிறார்கள் என இந்நூலில் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.
செத்தபின்னே சிவலோகம்
செல்லுவதை யாரறிவார்
புத்தியுடன் உடல் கொடை
பூமிக்கு வழங்கிடுவீர் - என ஊனமுற்றோர்களை மீட்டெடுக்கும் விழப்புணர்வு பரப்புரையாக உடல் கொடையை வலியுறுத்துகிறார்.
இமயம் குமரியை
இணைத்திட நினைத்தவா
எங்கள் காவிரிக்கு
இழுத்துவா கங்கையை - என பாரதிக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
யானை கட்டி போரடித்தார்
எம்தமிழர் நெற்களங்கள்
பூனை தூங்கும் அடுப்பாகி
புலம் பெயர்ந்து ஓடுகின்றார் - என இன்றைய தமிழன் நிலையைப் பற்றி வெகுவாகவே கொதித்துள்ளார் நூலாசிரியர். மனிதநேயம், தமிழரின் நிலை என பல அரிய சிந்தனைகளுடன் படைக்கப்பெற்ற இக்கவிதை நூலை அனைவரும் வாசிக்க வேண்டும்.
வெளியீடு; ஜெயந்தி பதிப்பகம்,
எண்-9 சோலைநகர், முதன்மை தெரு,
முத்தியால் பேட்டை,
புதுச்சேரி- & 605 003.
பேசிட : 94434 34488.
(பக்கங்கள்: 120. விலை:110)
Go Back