இதுவும் விடியல்தான் - 19-Jul-2016 03:07:14 PM

சாராய வாடையில்
சாக்கடை குடிசையில்
இருட்டு மெத்தையில்
வியர்வை போர்வையில்
உறவுகள் சங்கமம்.

உறக்கம் கூட
இரக்கம் மறந்த
நாட்களில்
பசியை
அவள் சாப்பிட்டாள்.
பசியின் உடலை
அவன்
பசி சாப்பிட்டது.

ஓரிரவில்
கள்ளச்சாராயம்
அவனை சாப்பிட்ட போது
விதவையின் கோலத்தில்
அவளுக்கு
விடியல் பிறந்தது.


- கவிஞர் புதியமாதவி


Go Back