மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன் - 16-Aug-2016 01:08:54 PM

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன்
ஜெயசிவா
வான் உயர் வளம்பெரும் கற்பனையில் உருவான மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன் கவிதை நூலை விளையும் பயிரான, கவிஞர் ஜெயசிவா மாணவப் பருவத்திலேயே சொல்நயம், பொருள்நயம் இவற்றோடு மனித நேயத்தையும் சேர்த்து வடித்துள்ளார். எட்டாக்கனி எனும் கவிதையில் பெரியவர்களை அவமதிப்போருக்கு சாட்டை அடி தந்துள்ளார். இவரது கவிதைகள் பாசம், பண்பாட்டுச் சீரழிவு, மனிதநேயம், காதல் என பன்முகச் சிந்தனையுடன் மிளிர்கிறது. இளம்பருவத்திலேயே கவிஞனாக உருவெடுத்திருக்கும் ஜெயசிவா, அப்பா கவிதையில்...

உன்குருதிய உருவமாக்கி
என் உடல் வளர்த்துவிட்ட..!
...எழாம் சாமத்திலும்
என்னை எழுப்பி 
ஊட்டிவிட்டியே...! 
உன்கை பட்டதாலயோ
பழைய சோறும் 
பச்சத் தேனாய் ருசிச்சதய்யா...!

தந்தை மீது பாசம் கொண்ட பிள்ளைகளை சிலிர்க்க வைக்கிறார் ஜெயசிவா. இன்றைய காலத்தில் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் தமிழ் குழந்தைகளின் தாய்மொழி ஏக்கத்தை..

‘தவிக்கிறது..! தமிழ் குழந்தை
தாய்ப் பாலுக்காக
ஆங்கிலப்பள்ளியில்...’

மூன்றேவரிகளில் முத்தான கருத்தால் மொழிப்பற்றை உண்ர்த்துகிறார். இப்படி.. சமுதாயத்தின் மீதும் தமிழ்மொழியின் மீதும் நீங்கா பற்று கொண்ட கவிஞரின் கவித்திறனை கவிதை விரும்பிகள் கட்டாயம் வாசிக்க வேண்டும்.

வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்,
எண். 17, பாய்க்கார தெரு, 
உறையூர், திருச்சி - 620 003
பேசிட: 94432 84823

(பக்கக்கள்: 64.    விலை: 60)


Go Back