கவிக்கொண்டல் விழா - 16-Aug-2016 06:08:33 PM

சென்னை அண்ணாசாலை உமாபதி கலையரங்கில் ‘மீண்டும் கவிக்கொண்டல்’ இதழின் 25ஆம் ஆண்டு விழா, இதழாசிரியர் மா.செங்குட்டுவனின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் எழுதிய ‘ஓர் அரிமா நோக்கு’ நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதி க.ஞானப்பிரகாசம் தலைமையேற்று உரையாற்றினார். மேனாள் மாநகரத்  தலைவர் சா.கணேசன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினர். கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் எழுதிய ‘ஓர் அரிமா நோக்கு’ நூலை பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் நீதிபதி க.ஞானப்பிரகாசம், மேனாள் மாநகரத் தலைவர் சா.கணேசன்  ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பெங்களூரு தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் மு.மீனாட்சி சுந்தரம், உ.கருணாகரன், மாம்பலம் ஆ.சந்திர சேகர், இரத்தினசபாபதி, த.கு.திவாகரன், இளவரசு அமிழ்தன்  முதலானோர் வாழ்த்துரை வழங்கினர். கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், அவர்தம் வாழ்விணையர் தாமரைச் செல்வி இருவருக்கும் மரியாதை செய்யப்பட்டது.

விழாவில் மு.பி.பாலசுப்பிரமணியம், கவிஞர் கண்மதியன், வா.மு.சே.திருவள்ளுவர், அகரமுதல இதழ் ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் மங்களமுருகேசன், ஆ.சீ.அருணகிரி, இளமாறன், பூபதி, மகிழ்க்கோ, இளஞ்செழியன், தென் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், மஞ்சநாதன், அரும்பாக்கம் சா.தாமோதரன், பெரியார் மாணாக்கன், தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் எழுத்தாளர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விழாவில் கலந்து கொண்டனர்.


Go Back