அச்சம் தவிர் - 11-Sep-2016 04:09:24 PM

அச்சம் தவிர்
- எஸ்ஏ .முத்துபாரதி.
அச்சம் தவிர் நூலில் எஸ்ஏ.முத்துபாரதி மக்களை சுய சிந்தனை செய்திட தூண்டுகிறார். அத்துடன் சமுதாயத்திற்கு தேவையான செய்திகளை சொல்லும் போது அதன் ஊடாக  நல்ல கருத்துகளையும் சொல்லத் தவறவில்லை. 

‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே’ என்பதற்கு பலர் தவறாக பொருள் கொள்கிறார்கள். பணம் இருப்பவர் தனது வீட்டு நற்காரியங்களில் வழங்கும் விருந்தில் சாப்பிடும் பந்தியில் (இலையில்) தனது செல்வச் செழிப்பைக் காண்பிப்பார் என்பது பொருள். குணம் குப்பையிலே என்பது, தானியக் குவியலைக் குறிக்கும். இன்று கூட நகரத்தார் பகுதியில் நெற்குப்பை என்ற ஊர் உள்ளது இதற்கு தக்க சான்று. அறுவடை செய்த தானியங்களைக் குவித்து வைக்கும் இடத்துக்குப் பெயர் குப்பை என்று பெயர். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு அந்த குவியலிலிருந்து எவ்வளவு எடுத்துக் கொடுக்கிறார் என்பதைப் பொறுத்து அவருடைய குணம் தெரிய வரும் என்பதாகும். நூல் முழுக்க, இதுபோன்ற செய்திகளுடன் நல்ல கருத்துகளும் காணக் கிடைக்கின்றன. 

செய்திகளை கதை போன்று சுவைபடச் சொல்லி,மக்களுக்குத் தேவையான பொருள் மிக்க, பொறுப்பு மிக்க உணர்வுகளையும் நூலாசிரியர் மிகுந்த துணிச்சலுடன் பதிவு செய்துள்ளார். அடுத்து இன்றைய சூழ்நிலையில் நமக்கோ நம்மைச் சுற்றியோ ஏற்படும் இடர்களை நாம் கண்டும் காணாதவர்கள் போல் ஒதுங்கி விடுகிறோம். இதற்கு காரணமே அச்சம் தான் இதனை தவிர்க்க வேண்டுகிறார் நூலாசிரியர்.  எஸ்ஏ. முத்துபாரதியின் அச்சம் தவிர் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல்.

வெளியீடு: நடவு பதிப்பகம், 
83 ராயபுரம், திருப்பூர் - 641601. 
பேசி: 96882 63329.

(பக்கங்கள்: 118. விலை: 100)


Go Back