தனித்தமிழ் நூற்றாண்டு விழா - 11-Sep-2016 05:09:59 PM

உலகத் தமிழ்க் கழகம் பெங்களூர்த் தண்டுக் கிளை சார்பில் தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. பெங்களூர்த் தமிழச் சங்கத் தலைவர் கோ.தாமோதரனின் துவக்க உரையுடன் தொடங்கிய விழாவில் “தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் சிறப்புச் சொற்பொழிவாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். 

முன்னதாக சிறப்பு விருந்தினர்களான சி.பூ.மணி, வி.மு.வேலு, பாவலர் மருது, மதியழகன், முத்துமணி, பாசுகரன் உள்ளிட்ட  தமிழ்ச் சான்றோர்களுக்கு பாராட்டிதழ் வழங்கி தமது சொற்பொழிவைத் தொடர்ந்தார். செம்மொழித் தமிழின் சிறப்பு குறித்தும் தனித்தமிழில் பேசுவதன் அவசியம் குறித்தும் ஓர் நீண்ட உரை நிகழ்த்தினார். 

விழாவில் பெங்களூரு தமிழ்ச் சங்கத் துணைச் செயலாளர் அமுதபாண்டியன், உலகத் தமிழ்க் கழகம் -பெங்களூரு தண்டுக் கிளை தலைவர் கி.சி.தென்னவன், செயலாளர் சு.பரிதிமான், துணைச் செயலாளர் ம.மதலைமணி, கருநாடக மாநில உலகத் தமிழ்க் கழக அமைப்பாளர் க.அரசு, தனித் தமிழ் தொண்டர் பா.ச.அரசேந்திரன், பேராசிரியர் சு.கோவிந்தராசன், கருநாடக மாநில திராவிடர் கழகச் செயலாளர் முல்லைக்கோ, “தமிழர் முழக்கம்” இதழ் ஆசிரியர் வேதகுமார் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்புகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Go Back