தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா - 16-Oct-2016 12:10:08 PM

மும்பை தமிழ்  காப்போம்  அமைப்பின்  சார்பாக தனித்தமிழ்  இயக்க நூற்றாண்டு விழா மாதுங்கா, மைசூர்  அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில்  காவை.ப.மிக்கேல்  அந்தோணி தலைமை ஏற்றார். பூலாங்குளம்  ஜெ.சுகுமாறன் வரவேற்புரையாற்ற, பெ.கணேசன்  அறிமுகவுரை நிகழ்த்தினார். 

‘தமிழ்  இலெமுரியா’ முதன்மை ஆசிரியர்  சு.குமணராசன்,  இணை வருமான வரித்துறை ஆணையர்  முனைவர்  பாண்டியன், டோம்பிவிலி தமிழ்  மக்கள்  சங்கத்தைச்  சார்ந்த நெல்லை பைந்தமிழ் ஆகியோர்  தமிழ்  மொழியின்  செழுமை குறித்தும்  தனித்தமிழின்  அவசியம்  குறித்தும்  நீண்ட சொற்பொழிவு ஆற்றினர். விழாவின்  நிறைவாக நாடோடித்  தமிழன்  நன்றி நவின்றார்.

விழாவிற்கான ஒருங்கிணைப்புப் பணியினை இறை.ச.இராசேந்திரன்  சிறப்பாக செய்திருந்தார். விழாவில்  பல்வேறு தமிழ்  அமைப்புகளின்  நிருவாகிகளும்  பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.


Go Back