புரட்சியின் மறுபெயர் - 15-Dec-2016 05:12:49 PM

எதிர்க்கத் துணிந்த
எழுச்சிப் 
பாவலன்!
எதிலும்
பொதுமை
எழுப்பும்
ஆவலன்!

வேர்களைத் தேடியே
விசாரணைச்
செய்தவன்!
விடியலைக்
கவிதையாய்த்
தமிழினில்
நெய்தவன்!

ஆதிக்கத் திமிரிடம்
அடங்க
மறுத்தவன்!
தொல்
தமிழ்
விடுதலைத்
தொடங்கத்
துடித்தவன்!

பெரியார் பிரபா
அம்பேத்கர் மார்க்சென
பிழையிலா
தலைவரைப்
பெரிதும்
மதித்தவன்!
வறியார்
வாழ்வினை
வழி
மறிப்போர்
தமை
அடங்கா
கவிதையால்
அடித்துத்
துவைத்தவன்!

என்றும்
‘இன்குலாப்’
புரட்சியின்
வடிவம்

இவரது
எழுத்தால்
எம்
இனம்
விடியும்!

- கவிஞர் அறிவுமதி


Go Back