மகாராட்டிரா மாநிலம் - ஒரு பார்வை - 14-Jan-2017 05:01:46 PM

காராட்டிரம் இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமாகும். ‘மகா’ என்றால் பெரிய, ‘ராஷ்டிரா’ என்றால் தேசம் என்றும் பொருள். மகாராட்டிராவின் பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரைகளும் உயர்ந்து நிற்கும் மலைகளும் எண்ணற்ற அருங்காட்சியகங்களும் நினைவுச் சின்னங்களும் கோட்டைகளும் இந்தியாவின் வளமை மிக்க வரலாற்றின் உன்னத எடுத்துக்காட்டுகள். இந்தியாவின் செல்வ வளமிக்க மாநிலங்களில் ஒன்றாக திகழும் இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது. 

தோற்றம் : 1960

மொத்த மக்கள் தொகை : 11,23,72,972 (2011 கணக்கெடுப்பு)

தலைநகரம் : மும்பை

இரண்டாந்தர நகரங்கள் : நாசிக், பூனே, ஔரங்காபாத்

மண்டலப் பிரிவுகள் (6) : அமராவதி, ஔரங்காபாத், கொங்கண், நாக்பூர், நாசிக், பூனே.

மாவட்டங்கள் (36) : அகமது நகர், அகோலா, அமராவதி, ஔரங்காபாத், பீடு, பந்த்ரா, புல்தானா, சந்திரப்பூர், துலே, கட்சிரோலி, கோண்டியா, இங்கோலி, ஜல்கான், ஜல்னா, கோலாப்பூர், லாத்தூர், மும்பை, மும்பை புறநகர், நாக்பூர், நாண்டெட், நந்துர்பர், நாசிக், ஒஸ்மனாபாத், பர்பனி, பூனே, ராய்கட், இரத்தினகிரி, சாங்கிலி, சத்தாரா, சிந்து துர்கம், சோலாப்பூர், தானே, வார்தா, வாசிம், யவத்மால், பால்கர் ஆகியவை.

முதலமைச்சர் : தேவேந்திர பட்நவிசு

ஆளும் கட்சி : பாரதிய சனதா பார்ட்டி & சிவசேனா (கூட்டணி)

சட்ட மன்றம் : சட்ட மன்றம் - மேலவை, மும்பை

பொருளாதாரம் : இந்திய நாட்டின் மொத்த தொழில்துறை உற்பத்தில் 25 விழுக்காடு மகாராட்டிரா மாநிலத்தின் பங்களிப்பாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் முதல் 10 மாநிலங்களில் மகாராட்டிரா முதலிடம் வகிக்கிறது. 

தாய்மொழி : மராத்தி

கல்வியறிவு : 82.9 விழுக்காடு (இந்தியாவில் 6வது இடம்)

இலக்கியவாதிகள் : ஞானேசுவர், காகா காலேல்கர், துக்காராம், ஏகநாதர், கேசவாசுதா, வ.பு.கலே, வி.ச.காண்டேகர், விந்தா கரண்டிகர், அரி நாராயண் ஆப்தே 

சமுகச் சிந்தனையாளர்கள் : மகாத்மா ஜோதிராவ் புலே, சாவித்திரி பாய் புலே, அண்ணல் அம்பேத்கர், சாகு மகராஜ், பால கங்காதர திலகர்,  நரேந்திர தாபோல்கர்

புகழ்பெற்ற விளையாட்டுகள் : கபடி, மட்டைப் பந்தாட்டம்

சுற்றுலா, ஆன்மிகத் தளங்கள் : இந்திய நுழைவாயில், அஜந்தா குகைகள், எல்லோரா, எலிபண்டா குகைகள், தடோபா தேசிய பூங்கா, சீரடி, மகாலட்சுமி கோயில்

சாலை போக்குவரத்து : இந்தியாவின் மிக நீளமான புறவழிச் சாலை தொடர்ச்சியை கொண்டுள்ள இம்மாநிலத்தின்  மொத்த சாலை போக்குவரத்து 2,67,452 கி.மீட்டர் வரை நீளம் கொண்டது.

வரலாற்றுக் குறிப்புகள் : மராட்டியம் என்றாலே அனைவர் நினைவுக்கும் வருபவர் சத்ரபதி சிவாஜி. இவர் மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலை சிறந்து விளங்கியவர். இவரது நினைவைப் போற்றும் வகையில் மும்பையின் அரபிக் கடலோரத்தில் ரூ3,600 கோடி செலவில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்வண்டி போக்குவரத்து : இந்தியாவின் முதல் பயணிகள் தொடர்வண்டி ஏப்ரல் 13, 1853 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தானே முதல் மும்பை வரையிலான 32 கிலோமீட்டர் தொலைவிற்கு செலுத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகிலேயே தானே இரயில் நிலையம்தான் மிக அதிக பயணிகளை கொண்ட இரயில் நிலையம் ஆகும். தானே இரயில் நிலையத்தில் சராசரியாக ஒரு நாளில் 6 இலட்சத்து 54 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. மேலும் நடைமேடையில் இலவச இணையதள (வை-ஃபை) வசதியும் அளிக்கப்படுகிறது.


Go Back