டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம்; தற்கொலை முயற்சியால் பரபரப்பு - 26-Mar-2017 02:03:17 PM

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 12 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளிந் தற்கொலையைத் தடுக்க வேண்டும், ஓய்வூதிம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை, ஜந்தர் மந்தரில் தாங்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு முன்னதாக, சாலையில் விவசாயி ஒருவரை படுக்க வைத்து, மாலையிட்டு, மலர்களைப் போட்டு அலங்கரித்து, வாயில் துணியை மூடி, சடலம் போல சித்தரித்தனர். அருகில் மண்டை ஓடுகளை வைத்து சுற்றிலும் அமர்ந்து கொண்டு, சங்கு ஊதியவாறு ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இவ்வளவு நாட்களாகப் போராடியும் அரசாங்கம் கண்டு கொள்ளாததால்தான் தற்கொலை செய்ய தி்ட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


Go Back