அமுத விருந்து -
அமுத விருந்து
முனைவர் வேலூர் ம. நாராயணன்
வெயில் நகரம் என்று தமிழர்களால் அறியப்பட்ட வேலூரின் வெப்பம் வெகுவாகவே வேலூர் ம. நாராயணன் கவிதையில் ஆங்காங்கே சுட்டாலும் அது சமுதாயத்திற்கு தேவையான சூடுதான். அவரின் கவிதையில் ஒவ்வொன்றிலும் பல கருத்துக்கள் பொதிந்து கிடக்கிறது. ஊடகத்தைப் பற்றி;
நாடுகள் பற்பல குழப்பத்தில் இன்று
நெளிவதும் தவிப்பதும் எவராலே?
ஊடகம்; செய்தி இதழ்களினால் அவைத்து மிகச் சரியா
உரைத்திடும் பாதிக் கற்பனையால்..!
மது அரக்கனால் நல்லோரும் சீரழிவதை;
உள்ள நலத்தையும் இழக்கின்றார்- மதுவால்
உடலில் நலத்தையும் இழக்கின்றார்
நல்லவர் உறவினைத் தவிர்க்கின்றார்-அவர்தாம்
நவில்வன வற்றையும் வெறுக்கின்றார்..!
இன்றைய இளைஞர்களுக்கு அரசியலைப்பற்றி சொல்கிறார்;
கட்சிகள் எவற்றிலும் சேராதே-கைக்
காசினை அள்ளித் தெளிக்காதே
கட்சிகள் குழப்பக் குட்டையடா...!-அதில்
குளிப்ப தென்பதே மடமையடா..
இவ்வாறாக நறுக்கு தரித்தாற் போன்று நல்ல பல கருத்துகளை தொடர்ந்து சொல்லியிருக்கிறார். சுவைஞர்கள் சுவைத்து பருகலாம்.
வெளியீடு: தமிழ்ச்சோலை, 3,
பெரியார் வீதி, பாவேந்தர் நகர்,
ரங்காபுரம், வேலூர் - 9
பேசிட: 94863 84222.
(பக்கங்கள்:181 விலை:175)
Go Back