மேற்கத்திய நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பியதால் ஆத்திரம்: பிரபல தொலைக்காட்சி உரிமையாளர் சுட்டுக்கொலை - 30-Apr-2017 06:04:59 AM

ஈரான் நாட்டில் மேற்கத்திய நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பியதால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் ஒன்று தொலைக்காட்சியின் உரிமையாளரை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டில் மிக பிரபலமான GemTV என்ற தொலைக்காட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.

உள்நாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி மேற்கத்திய நிகழ்ச்சிகளின் உரிமம் பெற்று அவற்றை மொழிபெயர்ப்பு செய்து ஈரான் நாட்டில் ஒளிப்பரப்பி வந்துள்ளது.

இஸ்லாமியர்களின் கொள்கைகளை இந்நிகழ்ச்சிகள் அவமதிப்பு செய்வதாக தொலைக்காட்சிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வந்துள்ளன.

மேலும், தொலைக்காட்சியின் உரிமையாளரான Saeed Karimian(45) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், நீதிமன்றத்தில் அவர் ஆஜர் ஆகாத நிலையில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், தொலைக்காட்சியின் நிறுவனரும் அவருடைய பங்குதாரரும் இன்று துருக்கி நாட்டிற்கு சென்றுள்ளனர்.

துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் நகரில் இருவரும் காரில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென மர்ம கும்பல் ஒன்று கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தாக்குதலை நடத்திய பிறகு காருக்கு தீவைத்துவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Go Back