தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை - 15-Jul-2014 04:07:33 AM

தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை
- முனைவர் பூந்துறையான்.

ரு எழுதாளனின் படைப்பு மூலம் பதிப்பிக்கின்ற சொல்லானது சிறப்பாக அமைந்திடல் வேண்டும். இலக்கியம் தென்பட வேண்டும். இலக்கணம் உருப்பெற வேண்டும். யாப்பு, மெய்ப்பாடு, புலன், அழகு, தொன்மை, இயைபு, சமூகவியல், இவை ஒவ்வொன்றும் காரண காரியங்களோடு பின்னிப் பிணைந்து கைக்கோர்ப்பது போல், அடி நிமிர்வு இல்லா செய்யுளாக இன்றைய அய்க்கூ கவிதைகளைக் காணலாம். தமிழக - சப்பானிய அய்க்கூவும் ஆராய்ந்து கொள்ளப்படுகிறது. சேரிமொழி, வட்டார வழக்கு, நாட்டுப்புறம், நகர்ப்புறம், எச்சவகை, மெய்ப்பாடு, முன்னம், யாப்பு, மரபு, காலவகை பயன் ஆகியவற்றைச் செய்யுட்களில் கைக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியரின் கருத்து மறைந்த ஒழுக்கமாகக் களவியலாகவும், வெளிப்பட்ட ஒழுக்கமாகக் கற்பியலாகவும், இல்லற வாழ்வில் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவும் ஆகிய உருப்பொருள்கள் நிகழும் பாங்கானது புதுக்கவிதைகளுடன் இணைத்தும் யார்த்தல் வேண்டும். 

உருவம், உத்தி, உள்ளடக்கம் என்ற 3 நிலைகள் தொல்காப்பியக் கவிதையை வகைப்படுத்துவதாகும். புதுக்கவிதையின் மரபில் இயங்கும் போக்கினைக் காணும் போது வரலாற்று அரசியல், பொருளியல், சமூகவியல், அறிவியல், கலை, பண்பாட்டிலக்கியங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாற்றங்களை நம் நினைவில் கொண்டு தொல்காப்பியக் கவிதைக் கோட்பாட்டிலிருந்து தேவையை பெற்றுக் கொண்டு புதுக்கவிதைக்கான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளுகின்ற தன்மையைப் புலப்படுத்துகிறது. இது நமது அறிவுச் சிந்தனைக்கு உள்ள தமிழிய மரபுக் கோட்பாட்டை வளர்த்துக் கொள்ள வழிவகுக்கும் என்பதே முனைவர் பூந்துறையான் நமக்குத் தந்த தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை எனும் இனிமையான நூல். எல்லோரும் புதுக்கவிதை எழுத இன்னுமொருமுறை இந்நூலை கைகளில் ஏந்துவோம் தொல்காப்பியத்தில் நீந்திக் களிப்போம் . புதுக்கவிதை வடிப்போம் எனவே மறுமுறையும் இந்நூலைப் படிப்போம்.

வெளியீடு:
தமிழியல் ஆய்வு அறக்கட்டளை
337, திருவள்ளுவர் நகர்,
கள்ளிப்பட்டி - 638 505

(பக்கங்கள்: 316 விலை: 250)


Go Back