11 நூல்கள் வெளியீட்டு விழா - 11-Jan-2015 05:01:56 PM

கால்கரை சுடலை முத்து (தேவர்) 11 ஆவது நினைவு நாளை முன்னிட்டு காவ்யா பதிப்பகம் மூலமாக 11 நூல் வெளியீட்டு விழா ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி வ.உ.சி. கூட்டரங்கம் நடந்தது. பள்ளி சங்க செயலாளர் செல்லையா தலைமை வகித்தார். அருணா சிவாஜி இறைவணக்கம் பாட நிகழ்ச்சி  துவங்கியது. நல்லாசிரியர்  சு.நடராசன் வரவேற்றார். பேராசிரியர் காவ்ய சண்முகசுந்தரம் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் ச.வே.சு. நூல்களை வெளியிட்டார். 

முனைவர் கமல செல்வராஜின் நியாயமா? இது நியாயமா? நூலிலை பத்மகவி குற்றாலதாசன் பெற்றார். காமராசு எழுதிய பனிமலையும் அபூர்வ கண்டமும் என்ற நூலை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மோகன் வெளியிட்டார். பே.சுடலைமணி செல்வன்  தொகுத்த “முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள்” என்ற நூலை நல்வலடி சபாபதி (நாடார்) பெற்றுகொண்டார். பேரசிரியர் பாலசுப்பிரமணியனின் “மேலாண்மை பொன்னுசாமியின் கருத்தியல்கள்” என்ற நூலை முருகன் பெற்றுக்கொண்டார்.

“முனைவர் சுந்திரபாண்டியனின் புனைவுகள்” என்ற நூலை பேராசிரியர் வின்சென்ட், பாஸ்கர தொண்டைமானின் “ரகசியமணியும் கடிதங்களும்” என்ற நூலை திருவல்லிபுத்தூர் ராசாராமன், கழனியூரானின் “தி.க.சி.” என்னும் நூலை தோழமை வழக்கறிஞர் முபாரக் அலி, வல்லிகண்ணனின் சிறுகதைகளை பேராசிரியர் அழகேசன், நாவல்களை பேராசிரியர் அரிகரன், கட்டுரைகளை பேராசிரியர் சிவசு, மொழிபெயர்ப்புகள் பேராசிரியர் ஸ்டீபன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். முனைவர் முருகேசன் நன்றி கூறினார்.


Go Back