கவிஞர் மலர்மன்னனுக்கு விருதுகள் - 17-Feb-2015 06:02:37 PM

ராமநாதபுரம் கம்பன் கழகத்தின் 16வது ஆண்டுவிழாவில் பெங்களூர் கவிஞர், கவிமலர் வ.மலர்மன்னனுக்கு “கம்பன் கவி” எனும் விருதை அதன் தலைவர் எம்.ஏ.சுந்தரராசன் வழங்கினார். நிகழ்ச்சியில் தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இரா.துரை முருகன், பெங்களூரு புலவர் வீ.வில்வநாதன், தங்கவயல் பாவலர் இரா.கு.அரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய விருதுகள் வழங்கும் விழாவில் அதன் தலைவர் கலைமாமணி அ.உசேன் அவர்களின் முன்னிலையில் கவிமலர் வ.மலர்மன்னன் அவர்களுக்கு “செம்பணி சிகரம்” எனும் விருதை புரவலர் திரு.வே.பொ.சிவக்கொழுந்து, புதுசேரி மாநில அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு குரு.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து வழங்கினர். உடன் தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இரா.துரைமுருகன் உள்ளார்.


Go Back