இலக்கிய விழா - 22-Jun-2015 01:06:03 PM

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் 75 ஆம் ஆண்டின் தொடர் விழாவை முன்னிட்டு சிறப்பான முறையில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மும்பையின் முற்போக்கு கவிதாயினி புதியமாதவி வரவேற்பு கவிதையுடன் தொடங்க, ஈரோடு தமிழன்பன் தலைமையேற்க, கவிஞர்கள் கவிமுகில், கருணாநிதி, யுக பாரதி தங்களின் எழுச்சிமிகு கவிதைகளை படைத்தார்கள். கவிஞர் வெ.பாலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கவிதை வாங்கி வந்தோம் எனும் தலைப்பில் தலைமைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களும் அவரைத் தொடர்ந்து கவிஞர் மு.கருணாநிதி உண்மை ஒரு நாள் வெளியாகும் எனும் தலைப்பிலும் கவிஞர் கவிமுகில் மயக்கமா? கலக்கமா? எனும் தலைப்பிலும் கவிஞர் யுகபாரதி கடவுள் ஏன் கல்லானார்? எனும் தலைப்பிலும் கவி மழை பொழிந்தனர்.

தமிழ்ச்  சங்கத்தின் துணைத் தலைவர் இராசாராம் சங்கத்தின் முந்தைய கால செயல்பாடுகளையும் சங்கத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு விழா, அய்ம்பதாம் ஆண்டு விழா நிகழ்வுகளின் போது தமிழ் நாட்டிலிருந்து தமிழறிஞர் பெருமக்களை அழைத்து வந்ததையும் இதுவரை சங்கம் ஆற்றிய செயல்பாடுகளையும் எடுத்து கூறினார்.

நிகழ்ச்சியில் தலைமைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் நகைச்சுவைத் ததும்பும் கவிதைகளாலும் சிந்திக்க  வைக்கும் கவிதைகளாலும் எளிமையாக அவரின் தோற்றத்தை போன்று அருமையாக அமைந்தது.


Go Back