நூல் வெளியீட்டு விழா - 16-Sep-2015 11:09:12 AM

தாம் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் நீண்ட நூலக வேட்கையும் இடைவிடாத் தேடலும் பவளவிழா வயதிலும் தளராத இணையர், இன்றையத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் புதுக்கோட்டை,- திருக்கோகர்ணம் “ஞானாலயா” பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி இணையரின் பவள விழாவில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.சந்துரு பங்கேற்று “புத்தகம் பூத்த பொய்கை” என்னும் பவள விழா மலரை வெளியிட, மு.இராமுக்கண்ணு பெற்றுக் கொண்டார்.

“தேடலில் தெளியும் திசைகள்” என்னும் நூலை, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன மேனாள் பொறுப்பு அலுவலர்  க.இராமசாமியும் “நெஞ்சை அள்ளும் ஞானாலயா”  என்னும் நூலை, மேனாள் நிதித்துறைச் செயலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனும் வெளியிட்டனர்.

சாகித்திய அகதாமி விருதாளர், எழுத்தாளர் பொன்னீலன், குறும்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், சந்தியா பதிப்பகம் நடராசன், வைகறை, அல்லையன்சு சீனிவாசன், தங்கம் மூர்த்தி முதலியோர் உடன் உள்ளனர்.


Go Back