அயலக தமிழறிஞர் விருது -
சென்னை அன்பகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 107வது ஆண்டு பிறந்தநாள் விழா தி.மு.க. தலைமை இலக்கிய அணியின் சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் தி.மு.க இலக்கிய அணியின் சார்பில் பெங்களூர் கவிமலர் வ.மலர்மன்னனுக்கு “அயலக தமிழறிஞர்” விருதினை தலைவர் கவிவேந்தர் கா.வேழவேந்தன் வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்வில் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கயல் தினகரன், தஞ்சை கூத்தரசன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தென்னமுதன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
Go Back