நூல்கள் வெளியீடு - 15-Oct-2015 02:10:27 PM

ழுத்து அறக்கட்டளை சார்பில் கவிஞர் புதியமாதவி எழுதிய ‘மவுனத்தின் பிளிறல்’ கவிதை தொகுப்பும், கவிஞர் ஏகாதசி எழுதிய ‘மஞ்சள் நிற ரிப்பன்’ சிறுகதை தொகுப்பும் கன்னிக்கோயில் ராசா எழுதிய ‘பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்’ சிறுவர் கதை நூலும் சென்னை மயிலாபூர், பாரதிய வித்யாபவனில் வெளியிடப்பட்டது. நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், எழுத்தாளர் பிரபஞ்சன், பேச்சாளர் பாரதி பாஸ்கர், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களால் தொடங்கப் பெற்ற ‘எழுத்து’ இலக்கிய அமைப்பின் சார்பில் மூன்று நூல்கள் சென்னையில் 11--&9-2015 அன்று வெளியிடப்பட்டதில் மும்பையைச் சேர்ந்த எழுத்தாளர் புதிய மாதவி எழுதிய ‘மௌனத்தின் பிளிறல்’ என்ற கவிதை நூலும் ஒன்றாகும். மும்பை எழுத்தாளர் ஒருவர் தேர்வு பெற்றிருப்பதை ‘தமிழ் இலெமுரியா’ இதழ் வரவேற்று வாழ்த்துகிறது.


Go Back