உணவுத் திருவிழா -
மும்பை விழித்தெழு இயக்கமும் நல்ல சோறு இயக்கமும் இணைந்து நடத்திய பாரம்பரியமான பழந்தமிழர் உணவுத் திருவிழா மும்பை, டி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உணவு மீதான அரசியல் மற்றும் ஆளுமை, இயற்கை வேளாண்மை, மருந்தினைத் தவிர்த்து உணவே மருந்து மற்றும் வாழ்வியல் குறித்த சிறப்புரையை சித்த மருத்தவர் கு.சிவராமன் சிறப்பாக வழங்கினார்.
உணவுத் திருவிழாவில் பானகம், பீற்கங்காய் சாறு, இனிப்பு சிகப்பு அவல் பிரட்டல், வரகு பக்கோடா, பனிவரகு பால் பணியாரம், கம்பு இலை அடை, மாப்பிளை சம்பா கத்தரிக்காய் சோறு, சாமை காய்கறி பிரியாணி, வாழைத் தண்டு தயிர் பச்சடி, குதிரைவாலி தயிர் சோறு, கதம்பக்காய் கூட்டு, கேழ்வரகு பாயாசம், முலிகை தண்ணீர் ஆகிய பழந்தமிழர் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டன. இறுதியில் அனைவருக்கும் சிறுதானிய உணவு சமையல் குறிப்பு நூல் மற்றும் துணிப்பை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பெண்கள் 250 பேர், குழந்தைகள் 150 பேர் உட்பட 800 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மும்பை விழித்தெழு இயக்கத் தலைவர் பன்னீர் செல்வம், பொருளாளர் சிறீதர் தமிழன், தங்கபாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற நிகழ்வு அறிவித்த நாள் தொடங்கி இறுதி நிமிடம் வரை துணை நின்று உழைத்த விழுத்தெழு இயக்கத் தோழர்களான பிரான்சிஸ், மதன், சுரேசு குமார், வேல்முருகன், பாபு, காத்தவராயன், மாதவன், கதிர், ஈஸ்வரி தங்க பாண்டியன், பிரைட் கிராஃபிக்ஸ் ராம், பொன் தமிழ் செல்வன், முத்து கிருட்டிணன், மணி கேட்டரிங் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிற்குப் பெரிதும் துணை நின்றனர்.
Go Back