18 May 2014 4:25 am
உலகில் சமுக நோக்கு பார்வையாளர்களின் கருத்தில் பெண்ணியம் பற்றிய உண்மைகள் உயர்வாகவே பேசப்படுகிறது. சமுக ஆய்வாளர்களும் மனித சமுதாயத்திற்கு துணை சேர்க்கும் பாலமாக பெண்களின் ஆற்றலும் அறிவும் பயன்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். பெண்கள் இல்லாத உலக வாழ்க்கையும் தனிமனித வாழ்க்கையும் உப்பு இல்லாத பண்டம் போல. உப்பு கூடினால் கரிப்பு ஏற்பட்டு துப்பி விடத் தோன்றும். குறைந்து விட்டாலும் சப்பென்று இருக்கும் உணவில் உப்பைப் பயன்படுத்துவது போல, அதன் பயன்பாட்டிற்குத் தகுதியைத் தெரிந்து பயன்படுத்துவது போல, பெண்களின் பயன்பாடும் இருக்க வேண்டும். இதில் ஆண்களின் ஆதிக்கம் எப்படி நுழைந்தது? அதன் எல்லைக் கோடுகள் எதுவரையில் என்றெல்லாம் கேட்கப்பட்டு, பெண்களின் அடிமைத்தனம் எதுவரையில் தாழ்ந்து போயிருக்கிறது என்ற அளவுகோலையும் ஒப்பிட்டுச் சொல்ல முற்படும் போதுதான் முடிவு" இல்லாத ஒரு விளக்கத்தை இன்றைக்கு கேட்டுக் கொண்டிருக்கிறோம். உலகத்தில் நாடும் வீடும் இன்பமாக, மகிழ்ச்சியாக, அமைய வேண்டுமானால் முதலில் பெண்கள் தங்கள் உண்மையை இழந்து வாழக் கூடாது. விடுதலை உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படியானால் தான் அவள் தன் வரலாறும் தலைமுறையும் வளமோடும் வலிமையோடும் வளரும். இந்த இலட்சியத்திற்காகவே சான்றோர் பெருமக்கள் பலர் தம் தொண்டினை செலவு செய்திருக்கிறார்கள். இதன் பலன்கள் இன்றைய நோக்கில் பல வெற்றிப் படிகளை அமைத்திருக்கிறது. அது பலமுள்ளதாகவும், பக்கத் துணைகளோடு நிற்பதையும் நம்மால் காண முடிகிறது. எனினும், அது முழுமையான வெற்றிக்களமாக அமையவில்லை என்பது உண்மை. களங்கமும் காழ்ப்புணர்ச்சியும் நிறைந்த மனித வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சமநிலையில் நின்று தங்கள் உரிமை பறிபோகாமல் ஒத்த உரிமையோடு வாழும் முறையை இன்றைக்கும் சமுதாயம் எதிர்பார்க்கிறது. இதற்கு ஆண்கள் முதலில் வழி நடத்திச் செல்ல வேண்டும். எனக்குத் தெரிந்தவர் ஓர் அரசு அதிகாரி அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும் போதே "எங்கே அந்த முண்டை, தேவடியாள்" என்று திட்டுவார். அவருடைய திருவாய் மொழியே அதுதான். மனைவிக்கு அவர் தரும் மரியாதையும் அன்பும் இதுதான். ஊருக்கெல்லாம் சோப்பு, சீப்பு, கண்ணாடிகள் நன்கொடை வழங்கியும் அன்னதானமிட்டும் பெரிய மனிதர் என்ற பட்டமும் பெற்றுவிட்ட அவரை, அவர் வைதிருந்த இரண்டு சென்ன வீடுகளை சமூகம் அங்கீகரித்ததுதான் கொடுமையிலும் கொடுமை. இதிலிருந்து என்ன தெரிகிறது? அவருடைய இழிசெயலுக்கு நம்முடைய மனம் தாளம் போட்டுவிட்டதே என்பதுதான்! ஒருவருக்கு தனிமனிதர்களும் சமுதாயம் "வாழ்த்துப்பா" பாடுகிறது என்றால் பண்பாடு என்பதை எந்த அளவுகோலாகக் கொண்டு சொல்ல வேண்டும்? இழிவு என்று தெரிந்தும் இலாபத்திற்காக சலாம் போடும் மனிதக் கூட்டத்தை எப்படி திருத்துவது? பெண்ணியத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு இவைகளெல்லாம் உடந்தைகள். ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் பிரசவம் வரை அவளுக்கு எவ்வளவு துன்பங்கள் உள்ளன என்று யாராவது எண்ணிப் பார்த்தால் அரண்டு போய்விடுவார்கள். ஆதிக்காலத்திலிருந்தே ஆணாதிக்கம் என்பது சமுதாயத்தில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பெருமை ஆகிவிட்டது. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, உயர்ந்த ஆன்மிகவாதிகள் கூட பெண்மையின் மதிப்பை அவ்வளவாக உணரவில்லை. ஆன்மீக வளர்ச்சிக்கு பெண்களை ஒரு தடைக்கல்லாகவே பார்த்தார்கள். ஆணாதிக்கத்திற்கு ஜனகணமன பாட பல வழிகள் உண்டு. இலக்கியம் அதில் இனியது, வலியது. பெண்களின் குரலையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய அண்மையில் கவிஞர்கள் மாலதி மைத்ரி, கிருஷாங்கினி இருவரும் "அணங்கு" என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாக "இந்தியா டுடே" என்ற ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் சிக்கல்களுக்குரிய பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் பற்றி கவிஞர் குட்டி ரேவதி ஒரு படம் தயாரித்துள்ளார். இதில் புதுமைப் பெண்கள் ஆண்களை ஏன் வெறுக்கிறாங்கனு எனக்கு புரியல. மற்றப் பெண்கள் எப்படியோ தான் ஆண்களுகு எதிரானவர் கிடையாது. அடிப்படையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இருக்கு. …….. வேண்டுமானாலும் பாலுறவு (செக்ஸ்) வச்சுக்க முடியும். ஆனால் பெண்ணால் இது முடியாது. அவளுக்குத் தேவைப்படுகிறதெல்லாம் உணர்ச்சி….. ஆழமான அன்புதான். எந்த ஆண்கிட்ட ஆழமான காத உருவாகுதோ அவன் கிட்டதான் ஒரு பெண்ணால் தன்னுடைய பாலியல் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். இந்த உணர்ச்சி… அன்பு அல்லது காதல் ஏற்படாத வரையில் எந்தப் பெண்ணும் தன்னை லேசா தொடக் கூட அனுமதிக்கமாட்டாள். என்னுடைய 85 வயதில் யாராவது ஒரு ஆண் வந்து நான் உன்னை காலம் முழுவதும் பத்திரமா பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி கூப்பிட்டால், தான் அவனுடன் மகிழ்ச்சியோடு போய்விடுவேன். உணர்வு ரீதியான பாதுகாப்பு, உடல் ரீதியான பாதுகாப்பு ஆண்கிட்டே இருந்துதானே கிடைக்கும் என்றார் கேரள எழுத்தாளர் கமலாதாஸ்.- சீர்வரிசை சண்முகராசன்"