அரசியல் கட்சிகள் - தமிழ் இலெமுரியா

5 June 2013 12:32 pm

Arignar Anna

அரசியல் கட்சிகள் என்கிற தலைப்பில் இப்பொழுது இங்கு இருக்கின்ற அரசியல் கட்சிகளை மட்டும் கவனித்தால் முழு உண்மை தெரியாது. அரசியல் கட்சிகள் என்ற பொது எண்ணத்தில் மனதில் வைத்துப் பார்த்தால், அரசியல் கட்சி என்ற எண்ணம் எப்படி மனிதனுக்கு ஏற்பட்டிருக்க முடியும்?

இப்பொழுது இரண்டு பேர் சாதாரணமாகச் சண்டை போட்டுக்கொண்டால், ‘எதற்காகச் சண்டை? என்று கேட்கிறார்கள். ஒருவன் சொல்லுகிறான் _ இந்த வீட்டிலே எனக்கு மூன்றிலொரு பாகமிருக்கிறது; அதை இவன் தர மறுக்கிறான்; அதற்குக் கட்சி கட்டுகிறேன் என்கிறான். உடனே பெரியவர்கள் சொல்லுகிறார்கள் _ அதற்கு நீ ஏன் கட்சி கட்டவேண்டும்? என்று! இன்னும் சொல்லப்போனால், சில ஊர்களிலே சின்னத் தெருக்கட்சி, பெரிய தெருக்கட்சி, வடக்குத் தெருக்கட்சி, தெற்குத் தெருக்கட்சி, முதலியார் கட்சி, நாயக்கர் கட்சி, நாயுடு கட்சி, நாடார் கட்சி _ என்று. இப்படி இருப்பதைப் பார்க்கலாம்.

“அரசியல் கட்சிகள் மனிதனால் எற்படுத்தப்பட்டவையே _ ‘அரசியலை நாகரிகமாக நடத்தமுடியும்’ என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகுதான், கட்சிகள் தோன்றின. அதற்கு முன்னால் கட்சிகள் இருந்தன; எப்படி இருந்தன என்றால் _ இந்தப் பணக்காரனுக்கு ஒருகட்சி; அந்தச் சீமானுக்கு ஒரு கட்சி; இந்த சிற்றரசனுக்கு ஒருகட்சி; அந்தப் பேரரசனுக்கு ஒருகட்சி; இந்த ஊருக்கு ஒருகட்சி; அந்த ஏரிக்கு ஒருகட்சி; என்று இருந்தன.’’

“அரசியல் கட்சிகள் என்ற எண்ணம் ஏற்பட்டதே நல்லவர்கள் அரசியலில் ஈடுபடமுடியும்; அரசியலை நல்லதாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான்.’’

“அரசியல் கட்சிகளை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். மக்களே அரசியலை நடத்த ஆரம்பித்ததால்தான். உண்மையில் அவர்களது வாழ்வு துலங்கும் என்று கருதியதால்தான்!’’

வெறும் மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசியல் கட்சி என்று பேசுவதிலே பயன் இல்லை. மன்னர்கள் ஆண்ட காலத்தில் மந்திரிகள் இருந்தார்கள்; அவர்கள் மன்னர்களின் விருப்பத்திற்கு ஏற்றவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட மன்னர்களின் காலம் நாளாக, நாளாக மாறி நீங்கள் நாடகங்களிலேயும், திரைப்படங்களிலேயும் பார்க்கிற மாதிரி _ ஒரு மன்னருக்கு நல்ல மந்திரி என்று ஒருவன் கெட்ட மந்திரி என்று ஒருவன் இருப்பான். நல்ல மந்திரி, ‘வரி போடாதே’ என்பான்; கெட்ட மந்திரி, ‘வரி போடு’ என்பான்; நல்ல மந்திரி ‘புதிய அரண்மனை, கட்டாதே’ என்பான்; கெட்ட மந்திரி, ‘புதிய அரண்மனையை, அவசியம் கட்டத்தான் வேண்டும்’ என்பான். நல்ல மந்திரி, ‘மக்களைக் கொடுமைப் படுத்தக்கூடாது’ என்பான்; கெட்ட மந்திரி, ‘பயம் காட்டினால மக்கள் அடங்கி நடப்பர்’ என்று சொல்லுவான்.

இப்படி நல்ல மந்திரி _ கெட்ட மந்திரி, என்று ஏற்பட்ட பிறகு பார்த்தால், நல்ல மந்திரி கட்சி, கெட்ட மந்திரி கட்சி என்று இப்படித்தான் முதன்முதலில் கட்சிகள் தொடங்கி இருக்க வேண்டும்.

“முதன் முதலில் அரசியல் கட்சி என்று ஆரம்பித்த  ஒரு நாடு இருக்கிறதென்றால், அது இங்கிலாந்து நாடுதான்; மற்ற மற்ற நாடுகளில், கட்சிகள் பிற்காலத்தில் தோன்றின. ஆனால் ‘மன்னன் இருந்தாலும் அரசியல் கட்சிகள் இருக்கலாம்’ என்று தலைசிறந்த தத்துவத்தை உலகுக்கு நிலை நாட்டிக் காட்டிய நாடு இங்கிலாந்து நாடுதான்.’’ அங்கேதான், ஜார் என்கிற ஒரு மன்னன் _ மக்களையும் மதியாமல், சிமான்களையும் கலக்காமல் தன் இச்சைப்படி நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். அப்பொழுது மக்களுக்கு, ‘முதலில் மன்னனை எதிர்க்கலாம் என்ற தைரியம் வரவில்லை; சீமான்களுக்கு மட்டும் அந்த தைரியம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஒருநாள், மன்னன் தனியாக இருந்த சமயம் பார்த்து, சீமான்கள் எல்லாம் படைகளை அழைத்துப்போய், அவனை ஒரு மாளிகையில் நிறுத்திவைத்து _ மாளிகையிலிருந்து அவனை வெளிவராமல் தடுத்து, ‘நீ எங்களுக்குச் சரியான உரிமைகள் தருவதாக வாக்குறுதி தந்தால்தான் உன்னை வெளியே அனுப்பப் போகிறோம்’ என்றார்கள்; ‘மறுத்தால்?’ என்று மன்னன் கேட்டான். ‘மாளிகையிலிருந்து போகக் கூடாது’ என்றார்கள் அவர்கள்; ‘அப்படியென்றால்?’ என்றான் மன்னர். ‘அதற்கு நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை; நீயே தெரிந்து கொள்ளலாம்’ என்றார்கள் அவர்கள்.

“அவர்கள் அப்படிச் சொன்னதற்கு பொருள் என்னவன்றால் ‘நீ எங்களுக்கு உரிமை சாசனத்தைத் தந்தால் உன்னை மன்னனாக அனுமதிப்போம்; இல்லையன்றால், உன்னை மனிதனாக இருக்கக்கூட அனுமதிப்பதா கூடாதா’’ என்பது. எங்களுடைய வாளின் கூர்மைக்கும், உன்னுடைய கழுத்தின் வலிவற்ற தன்மைக்கும் பொருத்தம் பார்த்துச் சொல்லவேண்டுமே தவிர, நாங்களாகச் சொல்லவேண்டுமா’ என்று பயங்காட்டினார்கள்.

மன்னர் ‘உங்களுக்கு என்ன உரிமை வேண்டும்’ என்று கேட்டான்; ஒரு சாசனத்தை நீட்டினார்கள். அவன் அதைப் படித்து கூடப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுவிட்டான்; அதைத்தான் ஆங்கிலத்தில், விணீரீணீ சிணீக்ஷீtணீ -_ பெரிய உரிமை சாசனம் என்று சொல்லுவார்கள். அதிலிருந்து இங்கிலாந்து நாட்டில், ‘மன்னனைக்கூட மிரட்டி உரிமை பெற முடியும்’ என்ற தத்துவம் தோன்றிற்று.

“பிறகு இங்கிலாந்து நாட்டில் சீமான்கள் இரண்டாகப் பிரிந்து மன்னனை எதிர்க்கின்ற சீமான்களும், மன்னனை ஆதரிக்கின்ற சிமான்களுமாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டார்கள். அந்தச் சண்டைக்குப் பெயர் “கீணீக்ஷீs ஷீயீ tலீமீ க்ஷீஷீsமீ” என்று சொல்லுவார்கள். அதை ரோஜாப்பூ சண்டை என்று தமிழில் சொல்லுவார்கள். அது அவ்வளவு பொருத்தம் இல்லை. ஸிஷீsமீஎன்பதற்கு, ரோஜாப்பூ என்று, பொருள்கொண்டு, ‘ரோஜாப்பூச் சண்டை’ என்று சொல்லுகிறார்கள். ரோஜாப்பூவிற்குச் சண்டை ஏற்படவில்லை. ரோஜாப்பூவிற்காக சண்டைகள் ஏற்படுகின்றன _ அது வீடுகளில்! நாட்டில் ஏற்பட்ட சண்டை வெறும் ரோஜாப்பூவிற்காக ஏற்பட்டிருக்க முடியாது; இரண்டு தரப்பிலும், ஒரு தரப்பினர் வெள்ளை ரோஜாவைச் சின்னமாகவும், மறுதரப்பினர் சிவப்பு ரோஜாவைச் சின்னமாகவும் வைத்துக் கொண்டிருந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்தது.’’

“அதன்பிறகு அது. இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது; அதற்கு பிறகு வந்த ஒரு மன்னனை தூக்கிலே மாட்ட வேண்டும் _ மக்களுக்கு விரோதமாக நடக்கிறான் _ என்று கருதி அந்த நேரத்தில் ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் (சிவீஸ்வீறீ கீணீக்ஷீ). மொட்டைத் தலைவர்களும் குதிரை வீரர்களும் ஸிஷீuஸீபீ லீமீணீபீs ணீஸீபீ சிணீஸ்ணீறீவீமீக்ஷீs என்று பெயர் வைத்து, இரண்டு கட்சிகளாகப் பிரிந்து, அது நாளா வட்டத்தில், ‘லிபரல் கட்சி _ கன்சர்வேட்டிவ் கட்சி’ என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாறுதல் அடைந்தது. இவ்வளவு பெரிய வரலாறு அரசியல் கட்சிக்கு, இங்கிலாந்து நாட்டிலே இருக்கிறது.

“சாதாரணமாக, அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற வரலாறு உண்டா என்றால், இல்லை. சனநயாக காலத்தில் நாம் இருப்பதால், எங்கும் சனநாயகம் வாழ்கிறது என்று தப்பாகக் கணக்குப் போடுகிறோம். இப்பொழுதுகூட நமக்குத் தெரியாமல் _ கவனித்து வராமல் மன்னர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருப்பவர் ஒரு மகாராணியார்; சவுதி அரேபியாவில் மன்னர் இருக்கிறார்; திபெத் நாட்டில் ஒரு ஆத்திக மன்னரும் இருக்கிறார்; ஒரு லோகாய மன்னரும் இருக்கிறார். தலாய்லாமா, பஞ்சன்லாமா என்று இரண்டு பேர்கள் இருக்கிறார்கள்; பூட்டானில் ஒரு மகாராசா இருக்கிறார்.’’

இப்படி மன்னர்களும், சுல்தான்களும், மகாராசாக்களும் அடியோடு போய்விடவில்லை. இன்னும் சில இடங்களில் கோட்டை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி எல்லா நாடுகளிலும் கட்சிகள் இருக்கின்றனவா என்றால், சில நாடுகளில் கட்சிகள் இருக்கின்றன _ கட்சிகள் இல்லை. அமெரிக்க நாட்டில் கட்சிகள் இருக்கின்றன; இங்கிலாந்து நாட்டில் கட்சிகள் இருக்கின்றன; வேறு சில நாடுகளில் கட்சியிருக்கிறது _ கட்சிகள் இல்லை.

எகிப்து நாட்டைப்பற்றி நாம் நித்தம் நித்தம் படிக்கிறோம். அங்கு இருக்கும் நாசர் ஓர் அரசியல் கட்சிக்குத் தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு மூன்று திங்களுக்கு முன்னால்கூட தேர்தல் நடைபெற்றது. அங்கே ஒரே ஒரு பெட்டிதான் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஓட்டுச் சீட்டு கூட ஒரே ஓர் ஓட்டுச் சீட்டுதான். அதில் குறிப்பிட்டிருந்தது ஒரே ஒரு பெயர்தான். நாசர் என்கிற பெயர். அவரை எதிர்த்து யாரும் நிற்கவில்லை; காரணம், யாரும் நிற்க அனுமதிக்கப்படவில்லை.

“அனுமதிக்கப்படாததற்கு காரணம், எகிப்து நாட்டிலே நாசர் இருக்கும் கட்சி தவிர, வேறு அரசியல் கட்சிகள் கிடையாது. அப்படியென்றால், ‘யாரும் உண்டாக்கவில்லை’ என்று அர்த்தமல்ல. இருந்த கட்சிகள் எல்லாவற்றையும் நாசர், பதவிக்கு வந்த உடன் கலைத்துவிட்டார். கலைத்து விட்டதுமல்ல; ‘வேறு அரசியல் கட்சிகள் உண்டாக வேண்டுமென்றால், என்னுடைய அனுமதி பெற்றுத்தான் ஏற்படவேண்டும் என்பார்; சரி அனுமதி கொடு என்றால், ‘இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு கேளுங்கள்; யோசிக்கலாம்’ என்பார். ஆகவே அங்கு அரசியல் கட்சிகள் இருக்கின்றன _ கட்சிகள் இல்லை. ஆனால் தேர்தல் நடைபெறுகிறது.

“அரசியல் கட்சிகள் இல்லாமல் ஒரே ஓர் அரசியல் கட்சியிருந்து, அந்தக் கட்சிக்கு ஒரு தலைவர் இருந்து, தேர்தலுக்கு நின்று, மக்களைப் பார்த்து ஓட்டுப் போடுகிறாயா, இல்லையா? என்று கேட்டால், ‘போடாவிட்டால் என்ன செய்வானோ இந்தப் பாவி’ என்று கருதி 100க்கு 99 பேர் ஓட்டுப் போட்டார்கள்.’’

நாசர் சொல்கிறார்: ‘நானும் சனநாயக வாதிதான்; ஏனென்றால் நாட்டு மக்களில் 100க்கு 99 பேர்களின் ஓட்டைப் பெற்றுத்தான் நாட்டை ஆளுகிறேன்’ என்று!

ஏன் நாசரைச் சொன்னேன் என்றால், நாசரைப் பற்றிச் சொன்னால் இயற்கையாக உங்களது கவனம் ரஷ்ய நாட்டின் மீதும், சீன நாட்டின்மீதும் செல்லும் என்ற தைரியத்தில்தான். ஏன் இந்த இரண்டு நாட்டைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றால், அப்படிச் சொன்னால் நம்முடைய கம்யூனிஸ்ட் நண்பர்கள், ‘ஓகோ, எங்களைத் திட்டுவதற்குத்தானா இந்தக் கூட்டம்? என்று மெத்த வருத்தப்பட்டுக் கொள்வார்கள். அதற்காக அப்படிச் சொல்லாமல், எகிப்து நாட்டைக் காட்டி, ‘இதுபோன்று உள்ளவைகளை நீங்கள் எண்ணிப் பார்த்துக் கொள்க’ என்று சொல்கிறோம்.

“அரசியல் கட்சிகள் சில நாடுகளை ஆளுகின்றன; சில நாடுகளில், ‘அரசியல் கட்சி வேண்டாம்’ என்று மன்னர்களே ஆளுகிறார்கள். இந்த வகையான அரசியல் கட்சிகள் உலகத்தில் இன்றைய தினம் இருக்கின்றன.”

“அரசியல் கட்சிகள் என்று பொதுவாக வைத்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிற நேரத்தில், நம்முடைய நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்னால் அவைகளுக்கு என்ன வரலாறு இருக்கிறது என்று பார்த்தால் இன்றுள்ள நிலைமைகள் புரியும்.

“காங்கிரசில்கூட இன்றைய தினம் சில குறிப்பிட்ட தலைவர்கள். ‘காங்கிரசு என்பது ஒரு கட்சியாகிவிட்ட காரணத்தாலேதான், பல கேடுபாடுகள் வந்து புகுந்துவிட்டன; அது ஒரு தேசீய இயக்கமாக இருந்த வரையில் தேசீயக் கிளர்ச்சி நிறுவனமாக இருந்த வரையில் ஒன்றும் இல்லை; அதில் ஏதாவது சில குறைபாடுகள் வந்து புகுந்து விட்டன என்றால், அது அரசியல் கட்சியான பிறகுதான்’ என்று எண்ணிப் பார்க்கிறார்கள்; சில வேளைகளில் சொல்லவும் செய்கிறார்கள்.’’

“அரசியல் கட்சிகள் என்பது _ நாட்டில் ஆட்சி செய்வதற்கு மட்டும் என்று அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பல நாடுகளில் இருக்கின்றன; அமெரிக்காவிலுள்ள அரசியல் கட்சிகள் வெறும் அரசியல் கட்சிகள்தான்; ஓர் அரசியல் கட்சிக்கும் மற்றொரு அரசியல் கட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைச் சுலபத்தில் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. என்னையே நீங்கள் ‘ஐசனோவர் கட்சிக்கும் அவருடைய எதிர்க்கட்சிக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்? _ என்று கேட்டால், ‘என்னாலேயே சொல்ல முடியாது’  என்றுதான் சொல்லவேண்டும். என்னாலேயே என்றால், ‘உங்களால் சொல்ல முடியாது’ என்பது அதில் தொத்தி நிற்கிறது; ஏனென்றால் இருந்து பார்க்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.’’

“அந்தக் கட்சிகளில் ஒன்றுக்கு யானை _ சின்னம்: மற்றொன்றுக்கு, கழுதை _ சின்னம்! ஆம்; கழுதைதான் அவர்களுக்குச் சின்னம். கழுதையை, பொறுமைக்கு உதாரணமாக அவர்கள் கருதுகிறார்கள்; நாம் அதைக் கேவலமாக கருதுகிறோம்.’’

“இந்த இரண்டு கட்சிகளின் கொள்கை வித்தியாசத்தை மிக மெல்லிய கோடிட்டுக் காட்டக்கூடியதாக இருக்கிறது. உதாரணத்திறகு _ வெளிநாடுகளுக்கு உதவி செய்யலாமா? என்று ஐசனோவர் கேட்டால், எதிர்க்கடசியில் உள்ளவர்கள், ‘ஆம், செய்யலாம்’ என்று அப்படியே சொல்லாமல், உதவி செய்ய வேண்டியது அமெரிக்க நாட்டின் கடமைகளில் ஒன்று என்று கருதினாலும் _ இதற்கிடையில் என்ன என்ன சந்தேகங்களை வருவிக்க வேண்டுமோ அவைகளை வருவித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு உதவி செய்ய வேண்டுமென்கிற தத்துவத்தில் ஏதாவது உட்பொருள் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து _ ‘வெளிநாடுகள்’ என்று எந்த நாடுகளை குறிப்பிடுகிறார்கள் என்று பார்த்து _ அந்த வெளிநாடுகளுக்கு என்ன என்ன உதவிகள் தேவையானவை என்பதைப் பார்த்து _ அவைகளை நம்மாலே தரமுடியுமா என்று தீர்க்கமாக யோசித்து _ கொடுத்தால் அந்த நாடு ஈடேறுமா என்பதையும் பார்த்து _ கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டிய முறைப்படி கொடுப்பதில் எங்களுக்கு ஒரு சிறிதும் அட்யபமில்லை என்று சொல்லுவார்கள்.’’

இந்த வேற்றுமைகள்தான் அந்த அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்றன. அந்த அளவுக்கு நமது நாட்டில் அரசியல் அறிவு வளராத காரணத்தினால், ‘உண்டு’ என்று ஒருவர் சொன்னால், ‘இல்லை’ என்பதற்கு மற்றொரு கட்சியிருக்கிறது.

– பேரறிஞர் அண்ணா

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி