14 April 2014 7:00 am
அடுக்கு மல்லி- மயில் இளந்திரையன் அடுக்கு மல்லி எனும் கவிதை நூலை வாசிப்பவர்கள் மனம் மயங்கும் வகையில் கவிதைத் தத்துவங்களைக் கருத்துச் செறிவுகளை ஆங்காங்கே அள்ளி விதைத்து, செடியாய், கொடியாய், மரமாய், மலராய், கனியாய் மாற்றம் கண்டு நம் கைகளில் தவழ்கிறது அடுக்குமல்லி. கவிஞன் புலவனாவதில்லை. புலவன் கவிஞனாவதில்லை. இந்த இரண்டு நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு உண்டு. மயில் இளந்திரையன் நல்ல தமிழ் வார்த்தைகளால் சிறப்பான கவிதை நூலை படைத்துள்ளார். அடுக்கு மல்லி மணம் நிறைந்த கருத்துச் செறிவுள்ள நூலாகும்.வெளியீடு:தமிழ் மருதம்,2சி – 1, மாரியம்மன் கோயில் வீதி,மாச்சம்பாளையம், சுந்தராபுரம் (அஞ்சல்),கோவை – 641 024(பக்கங்கள்: 178 விலை: 140)