14 April 2014 7:03 am
அணுவிஷம்-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அணு விஷம் எனும் ஒரு தத்துவார்த்த நாடகம் நூலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூறப்படும் கருத்து யாதெனில் மனித வர்க்கம் தொடர்ந்து வாழ வேண்டுமானால் உடனே அணுகுண்டு விஷம் தடை செய்யப்பட்ட வேண்டும். அந்தச் செயல்களைத் தேசங்களின் தலைவர்கள் மூலமாகவேதான் செய்தாக வேண்டும். தேசம், மதம், சாதி, இனம், மொழி, பொருட்கள் என்ற வகையில் மனித இனம் கொண்டிருக்கும் பற்றுதல்கள் என்ற பொத்தல்களாகும். இதில் பெரிய பொத்தல்தான் போர் என்பதாகும். மனித இன வாழ்வின் பொக்கிசத்தை அழித்து விடுகிறது. எனவே அணுகுண்டு உற்பத்தியையும், பயன்பாட்டையும் தடை செய்தாக வேண்டும். மனிதனாகப் பிறந்து வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் இது அக்கரையுள்ள விடயமாகும். எல்லாரும் எல்லாரிடத்தும் அன்பு கூர்ந்து வாழ்வோம். அணுவை எதிர்ப்போம் என்ற தத்துவத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என பதிவு செய்துள்ளார்.வெளியீடு: வேதாத்திரி பதிப்பகம், 180 காந்திஜி ரோடு, ஈரோடு – 628 001(பக்கங்கள்: 64 விலை: 30)