அம்மாவின் புலம்பல்கள் - தமிழ் இலெமுரியா

14 April 2014 7:06 am

அம்மாவின் புலம்பல்கள்- முகிலை இராசபாண்டியன் முகிலை. இராசபாண்டியன் ஒரு கவிஞராய், நாவலாசிரியராய், கட்டுரையாசிரியராய், சிறுகதை எழுத்தாளராய், எழுத்துலகில் பன்முகம் கொண்டவராய் காட்சித் தருகிறார். தொகுப்புக் கவிதையில் மகள் குறிஞ்சியைப் பார்க்க, தந்தை தண்டபானி வேட்டி கட்டி, ரப்பர் செருப்பு அணிந்து வரும் தந்தையிடம் மகள் குறிஞ்சி வெறுப்பைக் காட்டும் மாட்சி, குறிஞ்சி என்ற பெயரில் காட்டும் வெறுப்புணர்ச்சி, தந்தை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழில் குறிஞ்சி என அழைத்த பொறுப்புணர்ச்சி. அவளோ கருப்பு, மனதினில் நிறைய வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை. முதுமைக் காலத்தில் மகள் சம்பாத்தியத்தில் வாழ வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு இருக்கும் பெற்றோரின் நிலை கடன் போல் ஆகிவிட்டது. என்கிற பல நிலைகளை இந்தக் காலப் பிள்ளைகளின் மனநிலையை படம் பிடித்துக் காட்டி கடன் மூலம் நமக்கு கடன் பற்றி சிந்திக்க வைத்துள்ளார்.வெளியீடு: கோவன் பதிப்பகம், 72, எம்.ஜி.ஆர்.சாலை, நங்கைநல்லூர், சென்னை – 600 061(பக்கங்கள்: 160 விலை: 100)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி