அறவாணரின் படைப்பிலக்கியங்கள் கணிப்பீட்டுத் தராசில் - தமிழ் இலெமுரியா

11 January 2015 5:44 pm

அறவாணரின் படைப்பிலக்கியங்கள் கணிப்பீட்டுத் தராசில்- டாக்டர் வீர.ஆதிபராசக்திதமிழ்மொழி, தமிழர் இனம் குறித்துச் செய்திகளை அதன் வரலாற்று பண்பாடு வளர்ச்சியுடன் ஒப்பிட்டு இற்றைகால தமிழர் குமுகாயத்தின் மாற்றங்களுக்கான கரணியங்களை தெளிவாக விளக்குவதுடன், தமிழ்க் குமுகாயம் சந்தித்துள்ள இச்சரிவுகளை சரிசெய்வதெப்படி என அறிவுரை கூறும் தமிழறிஞர்கள் தமிழ் நாட்டில் மிகச் சிலரே. அச்சிலரில் முதன்மையானவராகத் திகழ்பவர் முனைவர் க.ப.அறவாணன் ஆவார். அவருடைய  படைப்பிலக்கியங்கள் ஆழ்ந்து பகுப்பாய்ந்து அதன் அறிவாழத்தை உணர்ந்தவர் தமிழ்நாட்டில் தற்போது பரவி வருகின்றனர். இது தமிழின முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் பாதையாகின்றது. அவ்வாறு பயணிக்கும் மாணவர் ஒருவரே முனைவர் வீ.ஆதிபராசக்தி ஆவார். க.ப.அறவாணனின் பலநூல்களை படிக்க வாய்ப்பிழந்தவர்கள் இவருடைய நூலிலிருந்து அறவாணனின் சிந்தனைச் செல்வங்களை ஒரு குளிகை போன்று பெற்றிட வாய்ப்பளித்திருக்கிறார். தமிழ், தமிழர்- இனமானம், வளர்ச்சி, மறுமலர்ச்சி ஏற்றம் குறித்து சிந்திப்போர் அவசியம் படிக்க வேண்டிய ஒர் அடைவு இந்நூல்.வெளியீடு: தமிழ்க்கோட்டம் 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு எம்.ஆர்.மருத்துவமனை அருகில் அமைந்தகரை, சென்னை – 600 029(பக்கங்கள்: 264 விலை: 200)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி