ஆரியம் – திராவிடம் – இந்தியம் - தமிழ் இலெமுரியா

18 May 2014 6:17 am

ஆரியம் – திராவிடம் – இந்தியம்- வ.பாரத்வாஜர் இந்நூல் கூறுவது யாதெனில் ஒருவன் பிறவியிலேயே இந்துவாகப் பிறக்கிறான் என்று கூறுவது அபத்தமான பதிவாகும்; ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. மனிதனாகப் பிறந்தவன் ஒற்றுமையின்மையால் சாதி, மதம், பரிபாசைகளை உருவாக்கிக் கொண்டு, இந்து, இசுலாமியர், கிறித்தவர் எனப் பாகுபாடு பார்த்து வேற்றுமையுணர்வை வளர்த்து, பகைமை, பொறாமை, ஆசை, கோபம், களவு இவைகளுக்கிடம் தந்து, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என ஏற்றத்தாழ்வை உருவாக்கி விலங்கினும் கீழ்நிலையில் வாழ்கிறான். பல மொழிகள் பேசும் நாம் ஏக இந்தியர் எனக் கூறுகிறோம். ஆரியம் அதிகாரவர்க்கமாகவும், பூர்வீகக் குடிகள் அடிமைகளாகவும் இன்றளவும் நடத்தப்படுகின்றனர். அதன் தாக்கம் நடைமுறையில் உள்ளது. டாக்டர் அம்பேத்கர், எல்வின்ஸ்டன் போன்றவர்களின் கருத்துகளை ஏற்பதே நல்லது. ஆரியம், திராவிடம், இந்தியம் என்பது விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். நூலாசிரியர் ஒரு நிலை சார்புடைய கருத்தையே வலியுறுத்துகிறார். திராவிடர்கள் வந்தேறிகள் என பதிவு செய்யப்பட்ட கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. திராவிடம் ஒரு கட்டமைப்பு அதன் பூர்வீகம் தொன்மை வாய்ந்தது என கால்டுவெல் அவர்கள் மிகத் தெளிவான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். எனவே இந்நூல் பலரால் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய நூலாகும்.வெளியீடு: காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை – 600 024(பக்கங்கள்: 374 விலை: 340)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி