17 March 2015 8:13 pm
ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள் – 5 - முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்தமிழ்த்தாயே என்று தொடங்கி ஊருக்குப் பயனின்றி என்ற கவிதைத் தொகுப்பு வரை 223 தலைப்புகளில் கவிதைகள் படைத்திருக்கும் கவிஞர் கோ.மோகனரங்கன் மோனையற்ற பாடல் சேனையற்ற நாடு, எது கை கொடுத்தாலும் எதுகையாவது என் கவிதைகளுக்கு சொந்தமாகி கை கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளவாறு எதுகை மோனை வடிவிலும், மரபுக் கவிதை, புதுக் கவிதை என மீண்டும் தன் கவிதை உலகில் உலா வந்துள்ளார். இவரது கவிதைகளில் செவிக்கினிய செந்தமிழ்ச் சந்தங்களால் சொற்சுவை, பொருட்சுவை கூட்டி கவிதையை மெருகூட்டி தமிழை அழகுபடுத்தியுள்ளார். ஆசிரியரின் கவிதை நயம், சொல்லாடல், தமிழ் மீது கொண்டுள்ள காதல் நம்மையெல்லாம் வியக்க வைக்கிறது. ஆலந்தூராரின் கவிதை படைப்புலகில் மற்றொரு மைல் கல்லாய் இந்நூல் திகழும் என்பதில் அய்யமில்லை. இந்நூல் கவிதை விரும்பிகளுக்கான சிறந்த படைப்பு.வெளியீடு:வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம் சென்னை – 600 088 (பக்கங்கள்: 264 விலை: 175)