15 March 2014 7:40 am
இலக்கணச் சுருக்கம் இலக்கணம் என்றாலே கற்பது கடிது என எண்ணி விலகிச் செல்பவர்கள் மத்தியில் பள்ளி மாணவர்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் இலக்கணத்தை மிகத் தெளிவாக, எளிமையாக ஒரு கையேட்டு அளவில் படைத்து வெளியிட்டுள்ளது தாழி அறக்கட்டளை. அனைவரும் பயனுறும் வகையில் தமிழியல் சார் எழுதப் பெற்ற இலக்கண நெறி, அக்கால கல்விமுறை, எண் வகைகள் என பசுமையுறப் பதிவு பெற்ற இந்நூல் இலக்கணம் பயில விரும்புவோருக்கான ஓர் சிறந்த வழிகாட்டி.வெளியீடு:தாழி அறக்கட்டளை,புதுச்சேரி – 605 001thazhifoundation@yahoo.in(பக்கங்கள்: 114 விலை: 100)