15 July 2014 4:08 am
இலக்கியப் பதிவுகள்- முனைவர் கடவூர் மணிமாறன். மரபும் மாண்பும் – பாரதிதாசனின் படைப்புகளில் பாலினச் சமத்துவம் என்ற இருபத்தொரு கட்டுரைகளைத் தாங்கி தான் ஒரு ஆய்வுயியல் நிறைஞர் என்பதை வலியுறுத்துகிறார். பாவேந்தர் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம், தமிழச்சியின் காதல் இரண்டும் பெண்திறன் பேசும் துன்பவியல் இலக்கியம் எனக் கூறுகிறார். பழந்தமிழ் மரபு சங்ககால இலக்கியத்தின் மாண்பு, திருக்குறளின் பெருமை, கம்பனின் கவித்திறம், வ.உ.சி., வீரமா முனிவர் போன்ற தமிழார்வளர்கள் வாழ்க்கை நெறி பாவேந்தரின் பாத்திறன் கன்னித் தன்மையோடு வாழும் வார்த்தைகள் பல ஆயிரம். இந்நூலில் பரிமேலழகரைப் பல இடங்களில் தமிழ் உரைக்க பயன்படுத்தியிருக்கிறார். துணைக்குப் பாவாணரையும் அழைத்திருக்கிறார். மாற்றம் என்பது தானாக வருவது. பாடுபொருள் அது அமையும் யாப்பு, மரபு, உவமையியல் என்பதற்கிணங்க. கவிஞர் வைரமுத்து கவிதைகளில் உவமையின் ஆளுமையைக் காண முடியும் மாற்றத்தை செய்பவர்களெல்லாம் வள்ளலாராகவோ, மகாகவியாகவோ, பாவேந்தராகவோ, கவிஞராகவோ, அறிஞராகவோ ஆகி விட முடியாது என்ற சிந்தனையாற்றலையும் மொழியாற்றலையும் இந்நூல் இங்கே பிரகடனப் படுத்துகிறது. கம்பன் இல்லாத கவிதைத் தமிழா அரிது என சவால் விடுக்கிறார். தான் ஒரு திராவிட இயக்கம் சார்ந்த கவிஞர், படைப்பாளி என்ற கருத்தை கடவூர் மணிமாறன் மெய்ப்பித்திருக்கிறார். இந்நூல் அனைவரும் படித்துப் பாதுகாக்கத் தகுந்தது.வெளியீடு: விடியல் வெளியீட்டகம், 1/53, பெரியார் நகர், குளித்தலை – 639 104 கரூர் மாவட்டம்(பக்கங்கள்: 176 விலை: 60)