18 August 2015 1:23 pm
இளவரச அமிழ்தன் கவிதைகள்- பாவலர் இளவரச அமிழ்தன்ஆசிரியர் இளவரச அமிழ்தனின் சீரிய படைப்பான இந்நூலில் முதல் 7 பாடல்கள் தமிழைப்பற்றியும் திருக்குறள், செம்மொழி என மொழியைப்பற்றிய சிறப்புகளையும் கூறியவர் தமிழிசை முத்துத் தாண்டவர், கம்பன், முவ, அண்ணா, சுரதா உள்ளிட்டு மும்பை குமணராசன் போன்ற அறிஞர்களின் பெருமை குறித்து கவிதை தீட்டியுள்ளார். எளிதில் அனைவரும் அறிந்திட செய்யும் வார்த்தைகளை கோத்து புனைந்திருப்பது பாராட்ட பட வேண்டிய ஒன்று. வள்ளலாரின் திருவருட்பாவிலுள்ள உயரிய கருத்துகளை ஆன்மிகப் புரட்சி, ஒருமைப்பாடு, திருமுறை-ஞான நூல், விவேகசித்தி என தொடர்ந்து இருபத்திமூன்று தலைப்புகளில் முத்திரை பதித்துள்ளார் ஆன்மாவைப் பற்றி ‘பசிப்பிணி’ கவிதையில், அயராது உடல்தனையே இயக்குகின்ற அறிவுள்ள ஆற்றலையே ஆன்மா என்போம் என்றும் ‘பண்பாட்டுச் சிலைகள்’ கவிதையில் கூரில்லா பணிதன்னை எடுத்துச் சொல்லிக் குலம் காத்து வளங்காத்து உயர்வோம் நாமே! என தமது கவியுள்ளத்தைக் காட்டியுள்ளார். இந்நூலின் மூலம் முத்தாய்ப்பாக வீட்டு மருத்துவத்தில் கீரைகளை வரிசை படுத்தி அதனின் மருத்துவ குணங்களை எடுத்து இயம்பியது பயனுள்ளவை. எளிய நடை, கருத்துச் செறிவு, பொருள் புதைவு என தெளிந்த நீரோடைபோன்று நூல் முழுக்க செல்கிறது நடை.வெளியீடு : அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் 45, முதல் முதன்மைச் சாலை, பாலாசி நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.(பக்கங்கள் : 112, விலை : 80)