18 May 2014 6:19 am
உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களின் நாட்டுப்பற்று மிக்கத் தீர்ப்புகள்- தொகுப்பாசிரியர்: கண குறிஞ்சி- தீர்ப்புகளின் தமிழாக்கம் வழக்குரைஞர் ந.இராதாகிருட்டிணன் காடப்பநல்லூர் குக்கிராமத்தில் விவசாயி மகனாகப் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்று 22 ஆண்டுகள் வழக்குரைஞராகவும், பல்வேறு சட்ட அனுபவம் பெற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றதுமே 10 ஆண்டு காலம் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட அவருடைய தீர்ப்புகள் பாராட்டப் படக் கூடியவை. இந்திய நாட்டின் உயர் பதவிகள் என்றால் அது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பதவிதான். ஜனாதிபதியாக தமிழ்நாட்டைச் சார்ந்த இராதாகிருஷ்ணன், வி.வி.கிரி.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஆகியோர் அலங்கரித்துள்ளார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலும் தமிழர் யாரும் இருந்ததில்லை. இதுவரை ஆந்திரம், கருநாடகம், கேரளத்தைச் சேர்ந்த 39 பேர்கள் இந்த உயர்ந்த பதவியில் இருந்திருக்கிறார்கள். தமிழர் அனைவரும் முகம் மலர நெஞ்சம் நெகிழ மகிழ்ச்சியிலும் பெருமையிலும் நம் உள்ளம் பூரிக்க தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு தமிழ் மகன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை கடந்த 40 ஆண்டுகளாக தனக்கென தனி முத்திரை கொண்ட நீதிநாயகம் நீதிபதி சதாசிவம் 40வது நீதிபதியாக பொறுப்பேற்றார். தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் அவரை எண்ணி மகிழலாம். அவர் வழங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க சமூக நலம் சார்ந்த தீர்ப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.வெளியீடு: புதுமலர் பதிப்பகம் நந்தி – காவியா வளாகம், முதல் வீதி, சக்தி நகர் (மேற்கு), திண்டல், ஈரோடு – 638 012(பக்கங்கள்: 56 விலை: 35)