உயர்வானவை - தமிழ் இலெமுரியா

18 August 2015 1:49 pm

உயர்வானவை- முனைவர் க.ப. அறவாணன்மனிதர்களின் குணாதிசயங்கள் அவர்கள் வளரும் விதத்தைப் போன்றே அமையும்  என்பதை நூலாசிரியர் இந்நூலின் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். ‘சகோதரப் பாசம்’ எனும் கதையில் அண்ணனுக்குத் தெரியாமல்  அண்ணனின் வங்கிக் கணக்கில்  தம்பி பணம்  போடுவது  தம்பி கணக்கில்  அண்ணன்  பணம் போடுவது என அண்ணன்  தம்பி உறவுகளையும், ‘அன்பு’ எனும் கதையில் ஊனமுற்ற நாய்க்குட்டியை ஊனமுற்ற சிறுவன்  வாங்கிச்  செல்லுமிடத்தில் மனித நேயத்தையும்  நமக்கு படம்  பிடித்து காட்டுகிறார். சிங்கம்  கொடிய விலங்கு அல்ல; உலகில்  மிகக் கொடிய விலங்கு  மனிதர்கள்தாம்  என்பதை ‘மனிதன் எனும்  மிருகம்’ கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.இன்னும்  ஏராளமான குட்டிக்கதைகள்  கவர்ச்சியான தலைப்புகளில் அமைத்து நல்ல பல அறிவுரைகளை படிப்போர்க்கு வழங்கியுள்ளார்.  வானொலி உரை என்பதை நம் நினைவுக்கு சிறிதும் வராமலேயே சாமர்த்தியமாக நூலாக்கம்  செய்திருப்பது மிகச் சிறப்பு. இந்நூலை குழந்தைகள்  முதல்  பெரியவர்கள்  வரை படித்து பயனடையலாம்.வெளியீடு : தமிழ்க்கோட்டம் 2, முனிரத்தினம்  தெரு, அய்யாவு குடியிருப்பு எம்.ஆர்.மருத்துவமனை அருகில்,   அமைந்தகரை, சென்னை – 600 029.(பக்கங்கள் : 112, விலை : 75)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி