11 September 2016 4:24 pm
காட்டு நெறிஞ்சி-கவிமதி.சோலச்சிநல்ல தரமான விதைக்கு போதிய நீரும் நல்ல நிலமும் கிடைக்கப் பெற்றால் அந்த விதையானது முளைவிட்டு செழித்து வளர்ந்து மரமாகி இந்த சமுதாயத்திற்காக பெறும் பங்காற்ற முனையக்கூடும். இது போன்றே ஒரு நல்ல கவிஞனுக்கும் முறையான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றால், அவனும் இலக்கிய வானில் அபாரமாக ஒளிவீசி தமது ஆற்றலால் மின்னுவான் என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார் கவிஞர்.சோலச்சி. ‘தாயே வணங்குகிறேன்’ எனத் தாயின் பெருமைகளை உணர்த்தும் தன் முதல் கவிதை தொடங்கி இறுதிவரை படிப்போரையெல்லாம் தமது கவி நயத்தால் கட்டிப் போட்டு விடுகிறார் என்றால் அது மிகை யாகா. பணிவு, பாசம், காதல், கண்ணீர், தமிழ்மொழி என அனைத்து ரசங்களுடன் நம்மை கவி மழையில் மிக நன்றாகவே நனையவிடுகிறார். தன்னை வளர்த்து ஆளாக்கிய திருமதி. சோலச்சியின் தாய்மைக் குணத்தை, தாயின் அரவணைப்பைப் பற்றி தமது கவிதையினால் அனைவரையும் நெகிழ்ச்சியோடு கலங்கச் செய்கிறார். கோணிப்பையில் குடிசைக் கட்டி-குடும்பங்களோ சாக்கடை யோரத்தில்…கண்களை ஈர்த்தபடிகட்சிகொடிகளோ கம்பீரமாய்பறக்குது சாலையோரத்தில்… !என ‘விடியல்’ கவிதையில் ஏழை மக்களின் வாழ்க்கை அவலத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறார். தற்போதைய நடைமுறைச் சிக்கல் குறித்து பெரும்பாலான கவிதைகளைப் படைத்திருப்பதே நூலின் சிறப்பாகும்.வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம், எண்.17, பாய்காரதெரு, உறையூர் - 620 003 பேசி: 94432 84823. (பக்கங்கள்:128 விலை 110)