16 December 2014 2:49 pm
கௌரவன்ஆனந்த் நீலகண்டன்தமிழில்: நாகலட்சுமி சண்முகம்இந்து மதத்தை மக்கள் மனங்களில் காலங்காலமாய் கட்டுக்குலையாமல் நிறுத்தி வைப்பதற்கு கட்டி எழுப்பப்பட்ட புழுகு மூட்டை இலக்கியமே மகாபாரதம் . கடந்த கால இந்தியத்தின் பண்பாட்டு கருவூலம் என்று அடுக்குமுரை வல்லாதிக்கத்தை பேணிக் காப்பவர் கள் கொண்டாடும் தொன்மம் மகாபாரதம். இந்த புழுகுப் பொட்டலங்களை புத்தகங்களாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் தொடர்ந்து மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று மக்களின் மூளைப்புலங்களை காவு வாங்கவும், ஊனப்படுத்தவும் செய்கின்ற தொன்மத்தை தூழாவி அதனுள்ளிருக்கும் சூட்சுமத்தை, வஞ்சகத்தை மானிடர் நேயத்திற்கு எதிராய் நின்றிலங்கும் ஒரு நூலினை அணுஅணுவாய் வாசித்து, அதனை நூறு கூறாய் ஆய்வு செய்து நயவஞ்சமாய் வீழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாய் ஆறுதலாய் கூர்செய்யப்பட்ட ஆயுதமே ‘கௌரவன்’ என்னும் புதினம் . அவன் ஒரு சிறுவன் .அவனுக்கு ஐந்து வயது கூட இருக்காது. அவனை வெளிச்சத்தில் பார்ப்பதற்காக, பீஷ்மர் அவனை தாழ்வரத்திற்கு தூக்கிச்சென்றார். அவன் உடல் முழுவதும் ரத்தத்தில் தோய்ந்திருந்தது. அவனுடைய பெரிய கண்கள் பீஷ்மரைப் பார்த்தன. தன் இளம் வாழ்வில் அவன் சேகரித்து வைத்திருந்த பகைமை அனைத்தும் அவன் பார்வையில் தெரிந்தது. என்று சகுனி அறிமுகம் செய்யும் காட்சி, மானுட மன ஓட்டத்தை வேவு பார்த்து நுட்பத்துடன் கதை நகர்த்தும் அழகு இந்த நூலினை மேலும் படிக்கத் தூண்டுக்கிறது.சாதியைச் சொல்லி, வேதத்தைச் சொல்லி தமிழ்மண் முற்றும் இழந்த கதையை சொல்லிச் செல்கிறது ‘கௌரவன்’ கதை. சகோதரனே நீ யார்? என்று கிருஷ்ணன் இனிமையாகக் கேட்டான் . வாசுசேன கர்ணன்" "ம்… உன் சாதி என்ன?"கர்ணன் எதுவும் கூறவில்லை. மாறாக அவன் சத்தம் போட்டு கத்த விரும்பினான். இந்துத்துவ பரப்பில் பத்து அவதாரம் எடுத்த கடவுள் கேட்கும் கேள்வியைப் பாருங்கள் என்று இப்புதினம் அடுக்குமுறை அதிகாரத்தில் உச்சியில் இருப்பவர்களின் உச்சிகுடுமியைப் பிடித்து ஆட்டுகிறது. "தன்னை உயர்ந்தவனாகவும், மற்றொருவனை தாழ்ந்தவனாகவும் பார்ப்பவன் மன நேயாளி" என்று புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் கூறியது நினைவுக்கு வருகிறது . தௌமியனைப் போன்ற பார்ப்பனப் பாம்புகள் காலங்காலமாய் நஞ்சியினைக் கக்கிக்கொண்டு இருக்கின்றன என்ற காட்சி அமைப்பு துரியோதனன் தர்மனைக் கொன்று விட்டான் என்கிற வழக்கில் தாழ்ந்த சாதி ஜரனை நிறுத்துவதற்கு ஆயிரம் பார்ப்பனர்களுக்கு உணவளிக்க வேண்டும் என பரிகார சூழ்ச்சியை எல்லாம் இந்த புதினத்தில் கொண்டு வந்திருக்கும் விதம் மிக அருமை. அதே காட்சியில் ஜரனை நேருக்கு நேர் பார்த்து விட்டால் அவனின் பாவங்கள் நம்மை தாக்கிவிடும் என்று மக்கள் அவனை பார்ப்பதை தவிர்க்கும் செயல் சாதிக்கொடுமையைத் தோலுரித்துக் காட்டுவது எழுத்தாளரின் கற்பனை ஆழத்திற்கும் அகலத்திற்கும் இன்னொரு சீர்கல் .சிணுங்காமல் ஓடும் ஆற்றொழுக்கைப் போல இந்த நாவலாசிரியரின் நடையில் கனத்த சிந்தனைகளை இழுத்து வந்திருக்கிறது. விரல்கள் வெட்டுண்ட நிலையில் "உடலின் வலியை விட மனதின் வலியே அதிகமாய் இருக்கிறது". என எண்ணும் ஏகலைவனைப் பற்றி, தொன்மங்களை தொடாதவர்களிடம் கொண்டு செல்லும் ஒரு நற்செயல்.வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு தமிழனும் அசுர வேர்களை கண்டடைய செய்திருக்கும் முயற்சி. நம் மூளைக்குள்ளே குழி தோண்டி நம்மைப் புதைத்துவிட்ட தொன்மங்களைப் பற்றி இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். ஆனந்த நீலகண்டனின் ஆங்கில நூலை தமிழ் மொழிபெயர்ப்பு நூல் என்றே சொல்ல முடியாத அளவுக்கு மொழிபெயர்ப்பில் வெற்றி பெற்றிருக்கும் நாகலட்சுமி சண்முகம் அவர்களுக்கும் பாராட்டுகள்.வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது தளம், உசா பிரிட் காம்ப்ளக்ஸ், 42 மால்வியா நகர், போபால் – 462 003மின்னஞ்சல்: manjul@manjulindia.com பக்கங்கள்: 628 விலை: 395- இறை.ச.இராசேந்திரன்."