சங்ககாலச் சமுதாயமும் செவ்வியல் தமிழும் - தமிழ் இலெமுரியா

14 April 2014 7:01 am

சங்ககாலச் சமுதாயமும் செவ்வியல் தமிழும்- கணியன் பாலன் தொல்காப்பியம் 2000 ஆம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையான வரலாற்றுச் சிறப்புக்குரிய இலக்கண நூலாகும். தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் இவைகளின் மூத்த மொழி தமிழ் மொழியாகும். எனவே தொன்மை வாய்ந்த தமிழ் ஒன்றே சிறந்து விளங்குகிறது என்ற வலிமையான கருத்தை ஆதாரத்தோடு கூறுகிறார். சமுகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு செழித்தோங்கி நின்று நிலைத்து தனது செவ்வியல் தமிழ் இலக்கியம் உயர் நிலை அடைந்தால் இன்று கீழை, மேலை நாடுகளின் அண்மைக் கால கண்டுபிடிப்பால் தமிழரின் உலகளாவிய தொடர்பு உறுதிப்படுகிறது. பண்டைக் கால இந்தியாவில் உயர் தரமான இலக்கியம் எதுவும் படைக்கப்பட வில்லை. சமயச் சார்பற்ற படைப்பிலக்கியம் எதுவுமில்லை. எனவே இந்தியா முழுவதும் தமிழ் மொழியைத் தவிர பிற மொழிகளில் செவ்வியல் தரமுள்ள இலக்கியப் படைப்புகள் எதுவும் இல்லை என்ற பதிவை கணியன் பாலன் இந்நூல் மூலம் நம் பார்வைக்கு பதிவையும், செவிக்கு கருத்தொலியையும் எதிரொலிக்கிறார்.வெளியீடு: புதுமலர் பதிப்பகம், 176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு – 638 004(பக்கங்கள்:64 விலை: 45)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி