சித்த மருத்துவ வரலாறு - தமிழ் இலெமுரியா

16 September 2015 9:59 am

சித்த மருத்துவ வரலாறு- முனைவர் ஆனைவாரி ஆனந்தன்நூலாசிரியர் ஆனைவாரி ஆனந்தன் தமது முனைவர் பட்ட ஆய்வேடான, சித்த மருத்துவ வரலாறு எனும் இந்நூல் மானிட உலகின் தொன்மை நாகரிகங்கள் தொடங்கி, உலகின் பாரம்பரிய மருத்துவ முறைகள், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள், தமிழர்களின் மருத்துவ வரலாறு, சித்தர்களின் மருத்துவ வரலாறு என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைத் தந்துள்ளார்.அரிசி, இஞ்சி, மாங்காய், முருங்கை, ஏலம், ஆடாதொடா போன்ற சொற்கள் அகில உலக அளவில் இன்று வரையில் மாற்றுப் பெயர்களின்றி தாவரவியல் பெயர்களாக நிலைபெற்று வருவதை அட்டவணையிட்டு காட்டுகிறார். மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லியும், இருமலுக்கு ஆடாதொடைக் குடிநீரும் தரப்படுகின்றது. இது நமது கலாச்சாரத்தின் வழி வழியாக பின்பற்றி வருவதையும் ஆமணக்கு, கறிவேப்பிலை, வேம்பு, துளசி, செம்பருத்தி, முருங்கை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி போன்ற 2000க்கு மேற்பட்ட மருத்துவ தாவரங்கள் வீட்டுவைத்திய முறையாக, தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இன்றும் நடை முறையில் உள்ளதையும் எடுத்துக் காட்டியுள்ளார். மேலை நாட்டு நூலகங்களில் மதிப்புமிக்க தமிழ் மருத்துவச் சுவடிகளை; இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பத்திரப் படுத்தி, பாதுகாக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டுள்ளது உள்ளபடியே தமிழ்ச்சமுதாயம் பெருமை கொள்ளத்தக்கதுதான். சித்த மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பாட நூலாக, வழிகாட்டி நூலாக, பயனுள்ள விதமாக அரிய ஆய்வு நூலை தந்தமைக்கு தமிழ்ச் சமுதாயம் மிகுந்த கடமைப் பட்டுள்ளது.வெளியீடு :   கவிக்குயில் பதிப்பகம், 14, சன் குடியிருப்பு, என்.வி.என் நகர் முதல் தெரு, திருமங்கலம், சென்னை – 600 040, (பக்கங்கள் : 408  விலை : 300)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி