சீறி எழுவாய் சினந்து - தமிழ் இலெமுரியா

15 July 2014 4:11 am

சீறி எழுவாய் சினந்து- புலவர் தமிழன். த.குமாரசாமி எசுதர்காலமெல்லாம் உரிமைக்குப் போராடும் தமிழனின் உரிமைப் போராட்டத்தை உத்வேகத்தை மனதில் கொண்டு தமிழன் குமாரசாமி எசுதர் சீறி எழுவாய் சினந்து" என்ற கவிதை நூல் மூலம் சாதி, சமயம், மதங்களைப் பொய் எனக் கூறிய வடலூர் வள்ளலாரை நம் முன்னே நிறுத்துகிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறிய பூங்குன்றன், தமிழ் மூதாட்டி அவ்வைப் பிராட்டியையும் அரசியல் குமுகாயச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசனையும் அவர்கள் தமிழ் மீது கொண்டுள்ள பற்றுதலையும் தாம் வடித்த கவிதை மூலம் நம்மவரின் அடிமை நிலைக்கு முதல் கரணியம் ஆரியப் புராண இதிகாசப் பொய்க் கதைகளே என்றும் புரட்டுக் கதைக்கு மறுப்பாளர்கள் மேற்கண்டவர்களே என்றும் வைர வரிச் சான்றுகளோடு கவிதை மூலம் நம் நெஞ்சத்தில் நிற்கிறார். ஈழத் தமிழரின் துயரை எண்ணி எரிமலையாய் மனங்குமுறி இனி தமிழரை ஒன்றிணைக்க முடியாதோ என்ற கலக்கமான ஏக்கத்தை ஆசிரியரின் கவிதை பதிவு செய்திருப்பது ஆசிரியரின் இன மான உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ் தெரிந்த ஒவ்வொரு தமிழனும் சீறி எழுவாய் சினந்து என்ற நூலைப் படிப்பது அவசியமாகும். இந்தக் கவிதை தலைப்பே நமக்கெல்லாம் மகுடமாய் அமைந்துள்ளது போல பாராட்டுகளுக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு பொக்கிசமாகும்.வெளியீடு: அருளகம், 1431, பாரதியார் இரண்டாம் தெரு,   காந்திகிராமம் (வடக்கு) கருவூர் – 639 004 பக்கங்கள்: 160"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி