15 March 2016 10:13 pm
ஜன்னல் ஓரத்து நிலா- கவிஞர்.த. ரூபன்.சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்பது கவிஞர்களுக்கே உள்ளத் தனித்தன்மை. இதை கைவரப் பெற்றவர் கவிஞர் ரூபன். தமது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூலில் முதல் கவிதையில் காதல் தோல்வியை குறிப்பிடுகையில்… நாளுக்கு நாளாய் ஆண்டுக்கு ஆண்டாய்பார்த்து பார்த்து வளர்ந்த காதல், வெறும் பேச்சால் முறிந்து போனதடி…! நீ பிரிந்தாலும் நீ சேர்ந்தாலும் உன் நினைவு எப்போதும்என் இதயம் சுமந்த வண்ணம் இருக்கும்…!என எளிமையான சொற்களால் காதலன் தனது காதலிக்கு சொல்வதாக காதல் தோல்வியை விளக்குகிறார்.உறவுகளை இழந்தோம் உரிமையும் இழந்தோம்எப்போதும் ஈழம் என்ற சொல்லேஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளுக்கும் முகவரியை கொடுக்கிறது.எனும் கவிதையில் ஈழத்தின் அவலம் அனலாய் தகிக்கிறது.பூமியில் நடக்கும் சமூக சீர்கேடுகளை,என் கண்ணால் பார்க்க முடியாது தாயே…மீண்டும் உன் கருவறையை தேடுகிறேன்சில காலம் வாழ்வதற்காய்..மீண்டும் உன்மடியினில் சுமப்பாயே தாயே…இப்படி உருக்கமான உணர்ச்சிமிகு கவிதைகளால் கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழ் மீதும் தமிழ் மக்களின் வாழ்வு மீதும் தீராக் காதல் கொண்ட இவரின் படைப்பு அற்புதம்.வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம், எண்:17 பாய்க்கார தெரு, உறையூர், திருச்சி – 620 003, பேசி: 94432 84823 (பக்கங்கள்: 128, விலை: 80)