தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் - தமிழ் இலெமுரியா

16 February 2016 10:26 pm

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்-தீ.கார்த்திக்நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ந்து வாழ்ந்த வாழ்க்கைதான் இயற்கை சார்ந்த வாழ்வியல் ஆகும்.இதனைகண்டறிந்து,  பயன்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொரு வரினுடைய கடமை என நூலாசிரியர்தீ.கார்த்திக்அறிவுறுத்துகிறார். வைகறை துயிலெழு" என்பது அவ்வைவாக்கு, எட்டு மணி நேர ஓய்வுக்கு பின், மனித உடல்அதிகாலையில் மிகுந்த ஆற்றலுடனிருக்கும். காற்றில் ஓசோன் பரவியிருக்கும் அந்த நேரம் மிகுந்த புத்துணர்வை அளிக்கும். எனவே அந்த நேரத்தில் பணிகளை தொடங்குதல், செயல் திறனைஅதிகரிக்கின்றது. காலையில் படிப்பதின் பலனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பிறகு நேரம் செல்ல செல்ல உடலின் ஆற்றல்; சிறிது, சிறிதாக குறைந்து மாலையில் களைப்பு ஏற்படுகின்றது. ஆனால் பொழுது விடிந்த பிறகும், தூங்கும் ஒரே இனம் நம் மனித இனம்தான். மற்ற உயிரினங்கள் விடியலுக்கு முன்பே எழுந்துவிடுகின்றன… இவ்வாறாக மனிதன் காலையில் தொடங்கி இரவு படுக்கைக்கு போகும்வரை ஒழுக்க நெறிகளையும் மனிதவாழ்வில் & -உடல் நலனில் &- மன வளத்தில் நிகழும் நிகழ்வுகளையும் விளக்கமாக, தெளிந்த நீரோடை போன்று இயற்கை வாழ்வியலை எடுத்து இயம்பியுள்ளார் நூலாசிரியர். படிப்போம்; பயன் பெறுவோம்.வெளியீடு : இயல்வாகை பதிப்பகம், கதித்தமலை அடிவாரம், தாலி கட்டிபாளையம்,   ஊத்துக்குளி – 638 751 (பக்கங்கள் : 128  விலை : 100)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி