17 February 2015 4:50 pm
தமிழ் மக்கள் வரலாறு ஐரோப்பியர் காலம்- க.ப. அறவாணன்.தொல்தமிழர் காலம் ஆரம்ப முதல் எட்டாவது ஐரோப்பியர் காலம் முடிய தமிழர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை பதிவு செய்திருப்பதே இந்நூலின் மூலம். சிந்திக்க சிந்திக்கத்தான் புதுப்புது சிந்தனைகள் பிறக்கும். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல், கீரியைப் பார்த்து உடம்பை சிலிர்த்துக் கொள்ளும் எலியைப் போல் இந்தியர்கள்; அதிலும் குறிப்பாக தமிழர்கள் வெகுவாக மாறி வருகிறார்கள். உலகமயமாதல் என்கிற அரசியல் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் 1991 ஆம் ஆண்டு இந்தியா கையெழுத்துப் போட்டு அரசியல்வாதிகளின் வணிகக் கோமான்களின் கொள்கைக்கு வழிவிட்ட பின்பு மிக வேகமாக நீர் வீழ்ச்சி போல கலாச்சாரப் படையெடுப்புக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். கம்யூனிஸ்டு நாடான சீனா சன்னலை மட்டும்தான் திறந்தது. ஆனால் நம் நாடோ சன்னல் கதவுகள் மட்டுமல்லாமல் தெருப்புற, கொல்லைப்புறக் கதவுகளையும் திறந்து வைத்து, அந்நியப் பண்பாட்டை நுழைய விட்டதுடன் நம் நாகரிகத்தை விற்று நம் வரலாற்று நிலையிலிருந்து விலகி நிற்கிறோம் என்னும் தன் வருத்தத்தை நூலாசிரியர் வெளிக் கொண்ர்ந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. இந்நூல் தமிழர் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசித்து பயன் பெற வேண்டிய நூல்.வெளியீடு: தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, எம்.ஆர். மருத்துவமனை எதிரில் அமைந்தகரை, சென்னை -600 029.(பக்கங்கள்: 224 விலை: ரூ.150/-)