தமிழ் மருத்துவக் களஞ்சியம் - தமிழ் இலெமுரியா

17 March 2015 8:11 pm

தமிழ் மருத்துவக் களஞ்சியம் - மருத்துவர் அரியூர் காசிபிச்சை சித்த மருத்துவ வரலாறு பற்றியும் இயற்கை வழி மருத்துவம், தமிழ் மருத்துவம் பற்றியும் ஓர் அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில் நோய் எதனால் எப்படி வந்ததோ அதனை வந்த வழியிலேயே நீக்கிக் கொள்வதுதான் சிறப்பான மருத்துவம் என்னும் அப்பட்டமான உண்மையை நூலாசிரியர் மருத்துவர் காசிப்பிச்சை தெளிவுபடுத்தியுள்ளார்.  பேறு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய ஆறும் கருவிலேயே அமைந்தது; மனம் குன்றினால் உடல் குன்றும் என்பது சித்தர்கள் வலியுறுத்தியது. எனவே உடல்நலம் மனநலம் சார்ந்தது என பல செய்திகளைக் கூறி, அவற்றை மக்களுக்கு வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கில் படைக்கப்பட்டுள்ள இந்நூல் நோயிலிருந்து விடுபடுவதற்காக மட்டுமல்லாமல் நோயே வராமல் தடுப்பது எப்படி? போன்ற செய்திகளும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. சித்தர்கள் கூறிய பல அரிய மருத்துவச் செய்திகளை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். நோயில்லாக் குமுகாயம் உருவாக அனைத்து மக்களும் இது போன்ற நூல்களை வாசிப்பது அவசியம்.வெளியீடு: வெண்ணிலா பதிப்பகம்,      மனிதம் இல்லம், 3/218,     இராமசாமி நகர்,      திருமானூர்-621 715,       அரியலூர் மாவட்டம்    (பக்கங்கள்: 307  விலை: 200)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி