தமிழ் - தமிழ் இலெமுரியா

17 March 2015 8:09 pm

தமிழ் - மகேந்திர வர்மாதமிழ்மொழியைப் பேசிய தமிழன், மொழியைச் சார்ந்து வாழ்ந்த தமிழன், அன்று நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தான். இன்றைய நிலை தமிழ் பேசுவதையே கேவலமாக எண்ணத் தொடங்கிவிட்டான். எப்படி தமிழன் தன்னை மறந்தான்? உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்து அணைந்த மனிதச் சுடர்கள் பலர் உண்டு. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதெல்லாம் வாய்ச்சொல்லோடு நின்றுவிட்ட நிலை. படிக்காத தாய் கூட தம் பிள்ளை தன்னை ‘ம்ம்மி‘ என்று அழைப்பதில் மெய் சிலிர்த்துப் போகிறார். அதற்காக அந்தத் தாய் வெட்கப்படுவதில்லை. அப்படிப் பேசுவதை கேட்பதை பெருமையாகவே கருதிக் கொள்ளும் தமிழர்நிலை கசப்பாகவே காட்சியளிக்கிறது. தமிழைப் படித்து தமிழால் உயர்ந்து தமிழால் பிழைப்பார். தமிழே அமிழ்து என்பார். ஆனால் தமிழுக்கு உழைக்க மாட்டார். தற்சமயம் எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் உள்ளன, உங்கள் அழைப்பு கவனிக்கப்படவில்லை, தற்காலிகமாக உபயோகத்தில் இல்லை’’ இவை அவரவர் செல்பேசியில் ஒலிக்கும் செல்மொழிகள். தமிழ் என்னும் தலைப்பிட்ட குறும்படத்தில் என்ன கூறப்படுகிறது என்றால், தமிழ் தற்காலிகமாக உபயோகத்தில் இல்லை. தமிழ் பேசும் தமிழ் இளைஞனைத் தீவிரவாதியாகக் கருதி, அவனைக் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை மேல் விசாரணை நடத்துகிறார்கள். தில்லியில் இருந்து வந்த புலனாய்வுக் குழுவின் விசாரணைக்குப் பிறகு, இளைஞன் தீவிரவாதி இல்லை என்பதைத் தீர்க்கமாகச் சொன்னபின் விடுவிக்கப்படுகிறான். இதுதான் கதையோட்டம். ‘தமிழ்’ தற்காலிகமாக உபயோகத்தில்  இல்லை  என்னும் குரலொலியை  முன்வைத்துச் சொல்லப்பட்டு குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது அருமை.  தமிழ்நாட்டிலேயே தீண்டத்தகாத மொழியாக ஆகிவிடுமோ   என்கிற கலக்கத்தில் மகேந்திர வர்மாவின் உணர்வுகள் பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. எல்லாத் தமிழர்களின் உணர்வோட்டம் என்று கூடக் கொள்ளலாம்.வெளியீடு:   மகேந்திர வர்மா,   எண்: 5, முதல் தெரு,   இரண்டாவது நிழற்சாலை, அசோகர் நகர்,   சென்னை-600 083."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி