தாய்ப்பால் இங்கே கசக்கிறது - தமிழ் இலெமுரியா

17 November 2014 11:35 am

தாய்ப்பால் இங்கே கசக்கிறது – சுரபி விஜயா செல்வராஜ்பொருளாதாரப் புரட்சி, வளர்ச்சி என்ற பெயரில் வானம் பார்த்த வறட்சி பூமியாக மாறி வரும் வேளாண் நிலம், சமுகப் பொருளாதார நிலையை உயர்த்த நடைபெறும் போராட்டத்தில் இழந்து போன கிராமச் சூழல், உறவுகள், உணர்வுகள், தனி மனித திரிபுகள் என பல அவலங்களை எடுத்துரைக்கும் ஓர் இலக்கியமாக அமைந்துள்ளதே இந்த சிறுகதைத் தொகுப்பு. கதைகளில் சொல்லப்படுகின்ற பாத்திரங்களும் கிராமங்களும் அழிந்து வருவதை நிலை நிறுத்த முயற்படும் தனிமனித முயற்சியே இந்நூல். ஒவ்வொரு சிறுகதையும் நம் கடந்த கால வரலாற்றைக் காட்டிக் கொடுத்து சில நேரம் கண்களில் நீர் படர வழி செய்கிறது. ஆற்று மணல் குறித்த சூழலில் கருத்தாக்கத்தில் அதன் படுக்கையில் வளர்ந்த உயிர்ப்புள்ள குழந்தைகளின் விம்மல்களும் விசும்பல்களும் எதிர்ப்புகளும் இழப்புகளும் அப்பட்டமாகப் பதிவாகியுள்ளன. முரண்களற்ற ஒரு மானுட நெறியை, வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்த இயலாதா! என்ற ஏக்கம் ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகிறது. இந்த நூலைப் படிக்கும் போது நாம் நம்முடைய கிராமத்திற்குச் சென்று வந்த உணர்வும் பழைய நினைவுகளும் நமக்குப் படையலாக அமைகின்றன. இத்தகையப் பதிவுகளை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தத் தலைமுறைகள் நம்மை நிராகரிப்படுவதைத் தடுக்க இயலும். பத்தொன்பது கதைகளும் படிக்கப் படிக்கச் சுவைப்பவை. சுகம் தருபவை.வெளியீடு: விஜயா பதிப்பகம் 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் – 641 001பக்கங்கள்: 136 விலை: 80

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி