15 March 2014 7:33 am
தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும்- மூதறிஞர் தமிழண்ணல் மூதறிஞர் தமிழண்ணல் இரா.நாகசாமியின் பார்வைக் கோளாறு பற்றிக் கூறியுள்ள கருத்துகள் யாவும் வரவேற்கத் தக்கது. ஏனெனில் தலைப்பே அவ்வாறுதான் அமைந்துள்ளது. தொல்காப்பியம் இலக்கண நூல் அல்ல என்ற இவரது கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. கீதை சாதிய அடிப்படையில் கடமைகளை வலியுறுத்துகிறது. ஆனால் திருக்குறட்பா பொதுமைப் படுத்திக் கூறுகிறது. கடமையாற்றுவதில் உள்ள மகிழ்ச்சியைக் குறளில் போல வேறு எந்த இந்திய மொழிகளிலும் எதிர்பார்க்க இயலாது. மேலை நாட்டு மொழி வல்லுநர்கள் யாவருமே திருக்குறளை முதன்மையாக ஏற்று தமிழ் எல்லா வளமும் பெற்றது என்பதனாலே தமிழ் செம்மொழி என ஹார்ட் வியப்படைகிறார். மூதறிஞர் தமிழண்ணல் இந்நூலின் தமிழரின் வாழ்வாதாரங்கள், பண்பாட்டு முறைகள், தமிழரின் சிறப்புக்ளையும், தொன்மைகளையும் அழகாக, தெளிந்த நீரோடையைக் காண்பது போல இந்நூலைப் படைத்துள்ளார்.வெளியீடு:தமிழ்ப்பேராயம்திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக் கழகம்,காட்டாங்குளத்தூர் – 603 203காஞ்சிபுரம் மாவட்டம்(பக்கங்கள்: 176 விலை: 120)