தோட்டக்காட்டீ - தமிழ் இலெமுரியா

15 November 2013 1:57 am

தோட்டக்காட்டீ -இரா.வினோத்ஈழமண்ணில் நிகழ்ந்தவற்றை நினைத்து நினைத்து நம் உள்மனவாசல்களில் அள்ளித்தெளித்த கோலங்கள் எத்தனையோ உண்டு.விடுதலை வேட்கையோடு கனவு கண்ட ஒவ்வொருவர் உள்ளத்திலும் கொந்தளித்து விலகிய உணர்வுகளின் வெப்பம் கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகிக் கிடக்கிறது. இலங்கை மலையக மக்களின் வலிகளை உண்மைத் தன்மையை உலகுக்கு உணர்த்தும் இலங்கையின் இன்னொரு முகம் என்னும் ‘தோட்டக்காட்டீ’ யாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.                   நிலம் மறந்து            ஊர் துறந்து            ஒட்டிய வயிற்றோடு            வட்டிக்கு வாழ்க்கைப்பட்டுக்            கசாப்புப் பட்டிக்கு            இழுத்துப்போன சேதியை            மூழ்கிப்போன தோணிகள்            வந்து சொல்லுமோ?என்று சோகத்தில் முகம் புதைத்த கசப்புகள் கவிதையாக விரிகின்றன.           தேசியக் கொடியும்            துரோக முத்திரையும்            பொத்தல் போட்ட            எம் தொப்புள் கொடியை            எவர் வந்து            தைத்துக் கொடுப்பார்?படிப்பவர் மனத்தை முள்ளாகத் தைக்கவைக்கும் வலிகொண்ட வரிகள். இலங்கைத் தீவை தேயிலைக் கூடையில் சுமந்து வாழும் மலையகத் தமிழரின் துன்பங்களை இதுவரை பதிவு செய்யப்படாத பேருண்மை என்று பெருங்குரலெடுத்துச் சொல்கிறார் நூலாசிரியர் இளைஞர் இரா.வினோத்.பெங்களூர் தமிழரான வினோத்,மலையகத் தமிழர்களை நேரில் கண்டு கேட்டு கிள்ளித்தந்த தேம்பல் துளிகளை ஒளிப்படங்களின் ஒருங்கிணைப்போடு தெளிவாக துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.             கவிஞர் இன்குலாப், பெ.முத்துலிங்கம்,எஸ்.வி.இராசதுரை,அருட்தந்தை இம்மானுவேல் ஆகியோரின் அழுத்தமான முன்னுரைகளோடு இந்நூல் காட்சியளிக்கிறது.மலையகத் தமிழர்களின் வாழ்வையும் வாழ்நிலைமைகளையும் ஆழமாக எளிமையாக மிகுந்த அறச்சீற்றத்தோடு அறம் பதிப்பகத்தின் ஒத்துழைப்போடு இந்நூலைப் படைத்திருக்கிறார்.                                                                                                                             .வெளியீடு: அறம் பதிப்பகம், ஹென்னூர் முதன்மை சாலை, பெங்களூர் – 560 077பக்கங்கள்: 120 விலை: 80-அறமொழியன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி