11 January 2015 5:40 pm
நறுக்குகள் நூறு- தி.நடராசன்பல்வேறு முகங்களைக் காட்டி வந்து கொண்டிருக்கும் ஹைகூ வடிவக் கவிதைக் கோணத்தில் நறுக்குகள் நூறு" புதிதாய்ப் பூத்துச் சிரிக்கின்றன. பழைமையான சிந்தனைகள் புதிதாய் ஒளிர்கின்றன. காலத்துக்கேற்ற நடைமுறை உணர்வோட்டங்களை பனங்கிழங்கு போல ஒடித்து நறுக்கி கடித்துத் தின்பதற்காக, எண்ணி நூறே நூறு என்கிற அளவில் நறுக்கித் தந்துள்ளார் நடராசன். சூத்திரம் தேவை கணிதத்திற்கு சாத்திரம் என்றுமே சாத்தியமில்லை வாழ்க்கைக்குஇப்படியெல்லாம் மனச்சுடர் ஏந்தி வினைச்சுடர் காட்டி சமுக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளன.வெளியீடு: விழிகள் பதிப்பகம், 8/எம் 139, ஏழாம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை – 600 041(பக்கங்கள்: 88 விலை: 50)"