17 November 2014 11:38 am
நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க!! – வழக்குரைஞர் பீ.ஆர்.ஜெயராஜன் உலக உயிரினங்களில் மேன்மையாகக் கருதப்படும் மனித இனத்தின் சிந்தனையாற்றலை சமூக வளர்ச்சிப் பாதையில் நெறிப்படுத்துவது என்பது இன்று சிலரிடமே காணப்படும் நிறையாகும். வாழ்வியலும் சமுகமும் வளர்ச்சிப் பாதையில் பயணித்து அனைத்துத் தளங்களிலும் ஒரு சமன்பாட்டு எண்ணத்தை எட்டுவதற்கு நம்முடைய ஒவ்வொரு செயலும் காரணிகளாக அமைகின்றன என்பதை நெஞ்சில் நிறுத்தி எழுதப்பட்டதே இந்நூல். சட்டத்தினால் ஒரு சமூகம் நெறிப்படுத்தப்படுவதை விட, மனித மாண்புகளும் மரபுகளும் பெரும் விடியலைத் தரும் என்ற நம்பிக்கைக்கு அணி சேர்க்கும் வகையில் வாசிப்பு, கலை, மகளிர் தொடர்பான சட்டங்கள், நட்பு, கடன் அட்டைகள் என பல தலைப்புகளில் எளிய பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ள நூல் இளைய தலைமுறையினரை வளப்படுத்த உதவும்.வெளியீடு: ஸ்ரீபதி ராஜன் பப்ளிஷர்ஸ், 69/42-சி, மீனாட்சி நகர், அஸ்தம்பட்டி, சேலம் – 636 007பக்கங்கள்: 144 விலை: 75