நிழல் காட்டும் நிஜங்கள் - தமிழ் இலெமுரியா

16 September 2015 9:56 am

நிழல்  காட்டும்  நிஜங்கள்- மலர்க்கொடி இராஜேந்திரன்திருக்குறள் கதைகளான, நிழல் காட்டும் நிஜங்கள் எனும் நூலை மலர்கொடி இராஜேந்திரன் படைத்துள்ளார். இன்றைய பரபரப்பான கால ஓட்டத்தில், சமுதாயத்தில் கூட்டுக் குடும்பம் என்பது அரிதிலும் அரிதாகிவிட்ட நிலையில்; இந்த நூல் வெளிவந்திருக்கிறது பொருத்தமான ஒன்றாகும். அன்றைய காலங்களில் பெற்றோர் வேலை நிமித்தமாக; வெளியே சென்று விட்டால்; தாத்தா, பாட்டிக்கள் குழந்தைகளுக்கு உண்பதற்கு ஒரு கதைப் பாட்டு, உரையாட ஒரு கதைப் பாட்டு, உறங்கிடும் முன் நல்ல அறிவார்ந்த கதைகள் இப்படியாக இனிதாக காலம் கழிந்தது. ஆனால் இன்று? அப்படி ஒரு சூழல் இல்லாத காரணத்தால், நல்ல நூல்கள் வாயிலாக மட்டுமே; குழந்தைகள் தங்களை தாங்களே நெறிப் படுத்திக் கொள்ளும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. அறத்துப்பால், பொருட்பால் ஆகிய 108 அதிகாரங்களில் உள்ள குறள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மிக பொருத்தமான கதைகளையும் வடிவமைத்துள்ளார். நூல் ஆசிரியர் மிக சாமர்த்தியமாக; வாழ்வின் உண்மை நெறிகளை விளக்க, திருக்குறள் கதைகளாக இதை உருவாக்கியிருப்பது மிக அருமை!  கவிராச பண்டிதர் செக வீரபாண்டியனார் என்னும் பெருமகனார் 1330 முதுமொழி வெண்பாக்கள் வரைந்து ஒவ்வொரு குறளுக்கும், ஒரு கதையை கூறியுள்ளார் இது தமிழில் புலமை வாய்ந்த புலவர்கள் மட்டுமே; படித்து இன்புறுவதாக, அமைந்தது. ஆனால், இன்று சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் படித்து பயன் பெறவும் குறிப்பாக குழந்தைகள் இந்நூலை வரவேற்பார்கள்.வெளியீடு :   விஜயா பதிப்பகம் 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் – 641 001 (பக்கங்கள் : 472, விலை : 250)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி